Friday 19th of April 2024 07:23:10 AM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ்.பல்கலையை முடக்க மாணவர் குழு ஒன்று போராட்டத்துக்கு அழைப்பு!

யாழ்.பல்கலையை முடக்க மாணவர் குழு ஒன்று போராட்டத்துக்கு அழைப்பு!


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினை முடக்கி நாளை முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு ஒன்று திரளுமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகம் என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் விளம்பரங்கள் சில பகிரப்பட்டுவருகின்றன.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான பரீட்சைகள் நடைபெற்றுவரும் சூழலில் நாளையும் பரீட்சைகள் நடைபெறுவதற்கான அறிவிப்பு ஏற்கனவே பல்கலைக்கழக நிர்வாகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை காலை 7 மணி தொடக்கம் பல்கலைக்கழத்தின் வாயில்களை முடக்கி தொடரவுள்ள போராட்டத்தில் அனைவரையும் பங்குகொள்ளுமாறு யாழ். பல்கலைக்கழக சமூகம் என்ற பெயரிலான சில சமூக வலைத்தள அழைப்புக்கள் ஊடகங்களில் பகிரப்பட்டுவருகின்றன.

எமக்கான மாணவர் ஒன்றியத்தை உடனடியாக அங்கீகரி எமக்கான தலைவரை நாம் தான் தெரிவு செய்ய வேண்டும் என்ற வாசகத்துடன் அதற்கான அழைப்பு விடப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரித்தபோது,

பல்கலைக்கழகத்தில் வன்முறையில் ஈடுபட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டில் பல்கலைக்கழக பேரவையினால் இடைநிறுத்தப்பட்டு பொது மன்னிப்பின் அடிப்படையில் பல்கலைக்கழகத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டிருந்த மாணவர் ஒருவர் கலைப்பீட மாணவர் ஒன்றியத்திற்கான தலைவர் பதவிக்கு போட்டியிட விண்ணப்பித்திருக்கின்றார். அவ்வாறு தண்டனைக்கு உள்ளான மாணவன் குறித்த பதவிக்கு போட்டியிட முடியாது என்று நிர்வாகம் அவருக்கு அறிவுறுத்தியிருக்கின்றது.

அதேவேளை மேலும் நான்கு மாணவர்கள் குறித்த பதவிக்கு விண்ணப்பித்திருக்கின்றனர்.

கொரோனா நிலவரம் காரணமாக மாணவர் தலைவர் தேர்தலை பல்கலைக்கழக நிர்வாகம் நடத்தியிருக்கவில்லை என்று தெரிகிறது.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட மாணவன் நிர்வாகத்தினருக்கு தெரிவிக்காமலேயே ஒரு தொகுதி கலைப்பீட மாணவர்களின் முன்னிலையில் தேர்தலை நடத்தியதுடன் தானே தலைவர் என்று அறிவித்ததுடன் நிர்வாகத்துக்கும் தகவல் வழங்கியிருக்கின்றார்.

குறித்த நியமனம் சட்டவிரோதமானது என்று தெரிவித்து நிர்வாகம் அவருடைய தலைமைத்துவத்தை ஏற்கவில்லை என்று தெரியவந்திருக்கின்றது.

இந்தச் சூழலிலேயே நாளை முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக குறித்த மாணவர் தரப்புக் குழு அழைப்புவிடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, திட்டமிட்டபடி பரீட்சை நடைபெறும் என்றும் பரீட்சைகளில் தோற்றாதவர்கள் அடுத்த ஆண்டு பரீட்சையிலேயே தோற்றவேண்டி ஏற்படும் என்றும் நிர்வாகத்தால் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக கலைப்பீட மாணவர் ஒருவர் அருவிக்குத் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பல்கலைக்கழக மாணவி ஒருவரின் தந்தை,

கொரோனா நெருக்கடியால் மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் ஒழுங்காக நடைபெறுவதில்லை, பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலேயே எமது பிள்ளைகளை கற்பதற்காக அனுப்பிவைக்கின்றோம். இந்தச் சூழலில் பரீட்சைகளைக் குழப்பும் வகையில் போராட்டங்களை நடத்துவது எமது பிள்ளைகளின் எதிர்காலத்தில் பாதிப்பையே ஏற்படுத்தும் என்று கவலை வெளியிட்டுள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE