Friday 19th of April 2024 05:32:43 AM GMT

LANGUAGE - TAMIL
.
மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு!

மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு!


முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(18) காலை 8.30 மணிக்கு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

புலம்பெயர் தமிழர்களின் அமைப்பான "விதையினை தெரிந்திடு" அமைப்பினரின் நிதி அனுசரணையுடன் ஈஸ்ட் லைட் நிறுவனத்தாரின் ஒருங்கிணைப்பில் தேவையுள்ள பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கில் இவை வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

பொருளாதார ரீதியாக பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்ற முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட ஏழு மாணவர்களும் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட ஏழு மாணவர்களுமாக 14 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு உதவும் நோக்கோடு குறித்த துவிச்சக்கர வண்டிகள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மாவட்ட செயலக சிறுவர் மேம்பாட்டு பெற்றோர்கள், குறித்த சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE