Thursday 20th of January 2022 08:43:35 AM GMT

LANGUAGE - TAMIL
.
தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு!

தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு!


தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும்.

இதனைவிட அனைத்து பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை பூங்காக்கள் செயற்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கும் ஜனவரி 20ஆம் திகதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று இடம்பெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் பின்னர் இந்த அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஏற்கனவே, ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக சுகாதாரத் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்ததுள்ள நிலையில் மேலதிக புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, மேற்கு மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE