Thursday 20th of January 2022 07:15:33 AM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கை கிரிக்கெட் அணியின் 2022 ஆம் ஆண்டுக்கான போட்டி விபரங்கள் அறிவிப்பு!

இலங்கை கிரிக்கெட் அணியின் 2022 ஆம் ஆண்டுக்கான போட்டி விபரங்கள் அறிவிப்பு!


இலங்கை கிரிக்கெட் அணி இந்த வருடம் பங்கேற்கவுள்ள சர்வதேச போட்டிகள் தொடர்பான விபரங்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ளது.

இதற்கமைய அந்த அணி 11 ஒருநாள், 8 டெஸ்ட், 11 இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கவுள்ளது.

அதில் இருபதுக்கு இருபது ஆசிய கிண்ணம் மற்றும் இருபதுக்கு இருபது உலக கிண்ண போட்டிகளும் அடங்குகின்றன

சிம்பாப்வே, அவுஸ்திரேலியா, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் இலங்கை அணி விளையாடவுள்ளது.

சிம்பாப்வே அணியுடன் ஒரு நாள் தொடர்!

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி பங்கேற்க உள்ளது.

ஜன-16, 18, 21 ஆகிய திகதிகளில் பல்லேகல விளையாட்டு மைதானத்தில் குறித்த போட்டிகள் இடம்பெறவுள்ளன.

அவுஸ்திரேலிய அணியுடன் ரீ-20 தொடர்!

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ரீ-20 தொடரில் விளையாட உள்ளது.

பெப் - 11, 13, 15, 18, 20 திகதிகளில் குறித்த போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இந்திய அணியுடனான தொடர்!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி அந்நாட்டு அணியுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்;டிகள் கொண்ட ரீ-20 தொடரில் விளையாட உள்ளது.

பெப் - 25 - மார்ச் 1, மார்ச் 5 - 9 திகதிகளில் டெஸ்ட் போட்டிகளும்,

மார்ச் - 13, 15, 18 ஆகிய திகதிகளில் ரீ-20 போட்டிகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE