Friday 29th of March 2024 07:06:22 AM GMT

LANGUAGE - TAMIL
-
அதிகாலையில் திருட்டு மணலகழ்வு; ரிப்பரை மடக்கி பிடித்து பொலீசில் ஒப்படைப்பு!

அதிகாலையில் திருட்டு மணலகழ்வு; ரிப்பரை மடக்கி பிடித்து பொலீசில் ஒப்படைப்பு!


யாழ்பாணம் வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் இன்று அதிகாலை 2:00 மணியளவில் சட்டவிரோதமாக மணல் மண் ஏற்றிக் கொண்டிருந்த ரிப்பர் வாகனத்தை மடக்கிக் பிடித்த இளைஞர்கள் அதனை மருதங்கேணி பொலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,,

நீண்ட நாட்களாக குறித்த பகுதியில் மணல் மண் ஏற்றப்பட்டுக் கொண்டிருப்தை அவதானித்த கிராம இளைஞர்கள் அது தொடர்பில் ஆழியவளை கிராம சேவகர், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர், ஊடாக பொலீசாருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமலிருந்த நிலையில் இன்று அதிகாலையில் மணல் மண் ஏற்றிக்கொண்டிருப்பதனை அவதானித்த ஆழியவளை கிராம இளைஞர்கள் அதனை சுற்றிவளைத்து அங்கிருந்து செல்லவிடாது தடுத்துக்கொண்டு ஆழியவளை கிராம சேவகர், மற்றும் பிரதேச செயலர் ஆகியோருக்கு பலதடவைகள் தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் தொலைபேசி அழைப்பிற்க்கு எந்தவிதமான பதிலும் கிடைக்காத நிலையில் மருதங்கேணி பொலீசாருக்கு அறிவிக்கப்பட்டு அவர்களிடம் வாகனமும் சாரதியும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனத்தையும், சாரதியையும் போலீசார் இன்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக மருதங்கேணி பொலீஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வடமராட்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE