Thursday 20th of January 2022 07:47:05 AM GMT

LANGUAGE - TAMIL
.
சட்டவிரோத யூதக் குடியேற்றங்களை எதிர்த்து பாலஸ்தீனர்கள் போராட்டம்!

சட்டவிரோத யூதக் குடியேற்றங்களை எதிர்த்து பாலஸ்தீனர்கள் போராட்டம்!


ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனம் மேற்குக் கரையில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் யூதக் குடியேற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேல் படையினருக்கு இடையே நேற்று வெள்ளிக்கிழமை மோதல் இடம்பெற்றது.

மேற்குக் கரையில் யூதக் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதை எதிர்த்தும், பாலஸ்தீனர்கள் தொடர்ந்து இஸ்ரேலியப் படைகளால் கைது செய்யப்படுவதைக் கண்டித்தும் கடந்த சில வாரங்களாக பாலஸ்தீனர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மேற்குக் கரையில் நேற்று இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனர்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தியபோது பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலியப் படையினருக்கும் இடையே மோதல் இடம்பெற்றது. இதனையடுத்து இந்தப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

இதேவேளை, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் நப்லஸ் பகுதியில் பலாடா அகதிகள் முகாமில் வியாழக்கிழமை இடம்பெற்ற சோதனையின்போது இஸ்ரேலியப் படைகளால் 21 வயதான பகீர் முகமது ஹஷாஷ் என்ற பாலஸ்தீனிய இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தச் சம்பவம் இடம்பெற்ற சில மணிநேரங்களுக்குப் பிறகு ஒரு இஸ்ரேலிய குடியேற்றவாசி தனது காரை ஏற்றி ஒரு பாலஸ்தீனியரைக் கொன்றார். 25 வயதான முஸ்தபா ஃபலானே என்பவரே கொல்லப்பட்டவராவார்.


Category: உலகம், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE