Friday 29th of March 2024 05:54:01 AM GMT

LANGUAGE - TAMIL
-
ரஷ்யாவை எதிர்கொள்ள உக்ரைனுக்கு கூடுதல் உதவி - அமெரிக்கா அறிவிப்பு!

ரஷ்யாவை எதிர்கொள்ள உக்ரைனுக்கு கூடுதல் உதவி - அமெரிக்கா அறிவிப்பு!


பாரிய ரஷ்ய படையெடுப்பை எதிர்கொள்ளும் உக்ரைனுக்கு கூடுதல் பாதுகாப்பு உதவியை அமெரிக்கா வழங்கும் என்று அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.

உக்ரைனுக்கு மேலதிக ஆதரவை வழங்குவதற்கான சிறந்த வழியை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். நாங்கள் உக்ரைனுக்கு ஆதரவாக இருப்போம். உக்ரைனுக்கு என்ன வழிகளில் உறுதியான ஆதரவை வழங்க முடியும் என தொடர்ந்து ஆராயப்பட்டு வருகிறது என பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கூறினார்.

உக்ரைன் - ரஷ்யா விவகாரத்தில் வெளிநாடுகள் தலையீடு செய்தால் அந்நாடுகள் வரலாற்றில் இதற்கு முன்னர் சந்தித்திராத நெருக்கடிகளை எதிர்கொள்ளும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.

இவ்வாறான நிலையிலேயே உக்ரைனுக்கான மேலதிக உதவிகள் குறித்த அறிவிப்பை பென்டகன் வெளியிட்டுள்ளது.

உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடங்குவதற்கு முன்பதாக உக்ரைனுக்கான இராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்கியது குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE