Friday 29th of March 2024 10:28:36 AM GMT

LANGUAGE - TAMIL
-
பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான கையெழுத்து வேட்டை மட்டக்களப்பிலும் தொடங்கியது!

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான கையெழுத்து வேட்டை மட்டக்களப்பிலும் தொடங்கியது!


தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் ‘‘பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும்” என்ற கோரிக்கையைத் முன்வைத்து நாடு பூராகவும் முன்னெடுத்துவரும் கையெழுத்துப்போராட்டமும் கவன ஈர்ப்பு போராட்டமும் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக இந்த போராட்டம் தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் தலைவர் கி.சேயோன் தலைமையில் நடைபெற்றது.

வாலிபமுன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் தீபாகரன் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஜனாதிபதி சட்டத்தரணியும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம்,அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,தமிழ்-முஸ்லிம் மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குமாறு முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த போராட்டத்தில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய சமாதான கூட்டமைப்பு,நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய முஸ்லிம் அரசியல் கட்சிகளும் இலங்கை ஆசிரியர் சங்கம்,கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் உட்பட பல்வேறு பொது அமைப்புகளும் ஆதரவு வழங்கியிருந்தனர்.

இன்றைய இந்த கையெழுத்துப்பெறும்போராட்டத்தில் பெருமளவான முஸ்லிம் பெண்களும் கலந்துகொண்டு ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குமாறு வலியுறுத்தும்போராட்டம் நடைபெற்றதுடன் இது குறித்த தடைச்சடத்தினை நீக்குமாறு வலியுறுத்திஆர்ப்பாட்டமும் நடாத்தப்பட்டது.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும்வ கையில் வருகைதந்த மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை இந்த கையெழுத்து போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE