Tuesday 16th of April 2024 09:34:26 AM GMT

LANGUAGE - TAMIL
.
4,000 சொகுசுக் கார்களுடன் தீப்பற்றி எரிந்த கப்பல் கடலில் மூழ்கியது!

4,000 சொகுசுக் கார்களுடன் தீப்பற்றி எரிந்த கப்பல் கடலில் மூழ்கியது!


போர்த்துகல் - அஸோர்ஸ் தீபகற்பத்தில் 4,000 சொகுசுக் கார்களுடன் தீப்பற்றி எரிந்த கப்பல் கடலில் மூழ்கியது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தீப்பற்றிய இந்தக் கப்பலில் தீயை அணைக்க கடுமையாக போராடிய போதும் அது பலனளிக்காத நிலையில் நேற்று கப்பல் மூழ்கியது.

ஃபெலிசிட்டி ஏஸ் (Felicity Ace) என்று பெயரிடப்பட்ட இந்த கப்பல் போர்ஷஸ் மற்றும் பென்ட்லீஸ் (Porsches and Bentleys) நிறுவனங்களின் 4,000 சொகுசுக் கார்களை ஏற்றிச் சென்றது.

ஜேர்மனியின் எம்டன் துறைமுகத்தில் இருந்து அமெரிக்காவின் ரோட் தீவு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது குறித்த கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டது.

பெப்ரவரி 16 அன்று தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து கப்பலில் இருந்த பணியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

மூழ்கிய கப்பலில் இருந்து இதுவரை எண்ணெய் கசிவு எதுவும் பதிவாகவில்லை. ஆனால் கப்பல் அட்லாண்டிக் அடிவாரத்தில் மூழ்கும் போது அதன் எரிபொருள் தாங்கிகள் சேதமடைய கூடும் என்று அஞ்சுவதாக ஃபையல் தீவின் அருகே உள்ள துறைமுகத்தின் கப்டன் ஜோவோ மெண்டெஸ் கபேகாஸ் தெரிவித்துள்ளார்.

கப்பல் மூழ்கிய கடற்பரப்பு சுமார் 3,500 மீட்டர் (2.17 மைல்கள்) ஆழம் கொண்டதாகும். தீப்பற்றி மூழ்கிய கப்பலில் இருந்த கார்களின் பெறுமதி சுமார் 155 மில்லியன் டொலர்களாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


Category: உலகம், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE