Saturday 20th of April 2024 03:47:46 AM GMT

LANGUAGE - TAMIL
.
சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் விலை தொடர்ந்தும் உயர்வு!

சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் விலை தொடர்ந்தும் உயர்வு!


சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய்விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.

அதற்கமைய, இன்றைய தினத்தில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 116 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினம் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாயொன்றின் விலை 110 டொலராக அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், இன்று அதன் விலை 6 டொலர் அதிகரித்து 116 டொலராக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாயொன்றின் விலை 8.24 டொலர் (8.5%) அதிகரித்து 105.08 டொலராக உயர்வடைந்தது.

அதற்கமைய, சுமார் 7 வருடங்களின் பின்னர், ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் விலை 100 டொலரை தாண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE