Thursday 18th of April 2024 02:51:10 AM GMT

LANGUAGE - TAMIL
.
கொவிட் சடலங்கள் உறவினர்களிம் கையளிக்கப்படும்; புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

கொவிட் சடலங்கள் உறவினர்களிம் கையளிக்கப்படும்; புதிய சுற்றுநிருபம் வெளியீடு!


கொவிட் தொற்றினால் மரணிப்போரின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 05 முதல் அமுலுக்கு வரும் வகையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் இது தொடர்பான திருத்தப்பட்ட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய நிபந்தனைகளாவன,

கொவிட் தொற்றினால் மரணிப்போரின் உடல்கள் சுகாதார ஊழியர்களால் சீலிடப்பட்டு, சவப் பெட்டியில் வைக்கப்படும். (உறவினர்களால் சவப்பெட்டி வழங்கப்பட வேண்டும்)

உடல் விடுவிக்கப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் அடக்கம்/ தகனம் செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு விடுவிக்கப்படும் உடலை அடக்கம்/ தகனம் செய்யப்படும் இடத்தை தவிர வேறு எந்தவொரு இடத்திற்கும் கொண்டு செல்ல அனுமதிக்கப்படாது. உடல் பதனிடப்படக் (embalmed) கூடாது.

உடல் அடக்கம்/ தகனம் செய்யப்படும் இடம் உறவினர்களின் விருப்பத்திற்கு அமைய மேற்கொள்ளலாம். (நீதிமன்ற உத்தரவுகள் இல்லாத நிலையில் மாத்திரம்)

உடலின் அடக்கம்/ தகனம் ஆனது, உறவினர்களின் செலவில் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் பிற்பாடு சுகாதார அமைச்சு அல்லது வேறு எந்தவொரு அமைச்சுகள், திணைக்களங்களோ பொறுப்பேற்காது. என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE