Wednesday 24th of April 2024 12:12:18 AM GMT

LANGUAGE - TAMIL
.
இன்று மின்வெட்டு அமுலாகும் நேர விபரங்கள் குறித்த அறிவிப்பு!

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர விபரங்கள் குறித்த அறிவிப்பு!


இன்றைய தினம் மின்வெட்டு அமுலாகும் நேர விபரங்கள் தொடர்பிலான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இன்று (மார்ச்-04) வெள்ளிக் கிழமை மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

நாட்டில் இன்றைய தினமும் சுழற்சி முறையில் ஏழரை மணிநேர மின்வெட்டு அமுலாக்கப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதன்படி, காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் 5 மணி நேரத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

அத்துடன், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியில் இரண்டரை மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்றையதினம் (04) நாட்டை 10 வலயங்களாக (E, F, | P, Q, R, S, T, U, V, W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் இரு கட்டங்களில் மொத்தமாக 7 மணித்தியாலங்கள 30 நிமிடங்கள் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய

- மு.ப. 8.00 - பி.ப. 1.00 மணி வரை

- பி.ப. 1.00 - பி.ப. 6.00 மணி வரை

முதல் கட்டத்தில் 5 மணித்தியாலங்களும்

- பி.ப. 6.00 - பி.ப. 8.30 மணி வரை - பி.ப. 8.30 - பி.ப. 11.00 மணி வரை

இரண்டாம் கட்டத்தில் 2½ மணித்தியாலங்களும் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபை விடுத்த வேண்டுகோளுக்கிணங்க குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE