Thursday 20th of January 2022 07:54:41 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஏன் இவ் வரைபை இந்தியாவிடம் கொடுக்க இப்போது அவசரம் காட்டுகிறார்கள் என்பது புரியவில்லை? - சுமந்திரன் கேள்வி!

ஏன் இவ் வரைபை இந்தியாவிடம் கொடுக்க இப்போது அவசரம் காட்டுகிறார்கள் என்பது புரியவில்லை? - சுமந்திரன் கேள்வி!


இணைந்து இந்திய பிரதமருக்கு அனுப்புவதற்காக தமிழ் கட்சிகள் தயாரிக்கப்பட்டுள்ள வரைபை இந்தியாவிடம் கொடுக்க இப்போது ஏன் அவசரம் காட்டப்படுகிறது என்பது குறித்து தன்ககு எதுவும் தெரியாதென்றும், இவ்விடயம் தொடர்பில் தனக்கு பல கேள்விகள் இருப்பதாகவும் த.தே.கூட்டமைப்பின் பா.மன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை எண்ணைக்குதம், இலங்கையின் மேற்கு முனையும இந்தியாவிற்கு கொடுப்பதாக செய்திகள் வருகின்ற இப்படியான நேரந்தில் இந்தியாவுக்கு 13 ஆம் திருத்தம் தொடர்பில் அவசரமாக ஒரு கடிதம் கொடுக்கப்பட வேண்டுமா? என்பதற்கு நான் பதில் சொல்ல முடியாது. அது சம்பந்தமாக எனது மனதிலும் பலவிதமான கேள்விகள் இருக்கின்றன. ஏன் இப்படியான தருணத்தில் இப்படியான முயற்சி முன்னெடுக்கப்பட்டது என்பதற்கு விடை எங்களுக்கு தெரியாது. அதை முன்னெடுத்தவர்களிடம்தான் கேட்கவேண்டும் என தெரிவித்தார் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் அக் கட்சியின் ஊடாகப் பேச்சாளருமான எம். ஏ.சுமந்திரன்.

தைப் பொங்கல் விழா நேற்று வெள்ளிக்கிழமை (14) வடமராட்சியில் உள்ள தமிழரசுக் கட்சியின் வடமராட்சி கிளை அலுவலகத்தில் இடம் பெற்றது.

இந்தியாவுக்காக திருகோணமலை எண்ணைக் குதங்கள் மற்றும் மொழும்பு மேற்கு முனையம் என்பன வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ள இவ் வேளை, தமிழ் தரப்பு அரசியற் கட்சிகளின் 13 து தொடர்பான பிரேரணையை இந்திய தூதுவர் ஏற்றுக் கொண்டால் இந்திய, இலங்கைக்கிடையேயான உடன்படிக்கையில் பாதிப்புகள் ஏற்பட வாய்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் காரணத்தாலேயே குறித்த வரைபை இந்தியதூதுவர் ஏற்க இழுத்தடிப்பு செய்து வருவதாக கூறப்படுகிறது இது உண்மையா? உங்கள் நிலைப்பாடு என்ன?

என ஏடகவியலாளர் எழுப்புய கேள்விக்கு ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்தியத் தூதுவருக்கு கையளிக்கப்பட இருந்த கடிதம் மலையக முஸ்லிம் கட்சிகளும் சேர்ந்து தான் இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்திருந்தது. இலங்கை தமிழரசுக் கட்சி இந்த வேலைத்தட்டத்திற்கு வந்ததன் பிறகு ஒற்றுமையை எப்படியாவது பேண வேண்டும் என்ற நோக்கிலே நாங்களும் இணங்கி இணைந்து செயற்பட்டோம். அப்படியான பொது கடிதத்தை தயாரிக்கின்ற போது அந்த இரண்டு மக்கள் கூட்டங்களின் அரசியல் அபிலாசைகளுக்கு மத்தியில் மதிப்பு கொடுக்கும் வண்ணமாக கடிதத்தில் இருந்து ஒரு சில விடயங்கள் நீக்கப்பட்டுத்தான் ஒரு ஒற்றுமை நிலைமை கடந்த 21 ஆம் திகதி மாலை ஐந்து முப்பது மணி வரை எட்டப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போது முஸ்லிம் மற்றும் மலையக கட்சிகள் தாங்கள் கையொப்பம் இடவில்லை என விலகிய பிறகு அப்படியான விட்டுக்கொடுப்புக்கள் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.

அதனாலே மிக முக்கியமாக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தொடர்ச்சியாக கொடுத்து வருகின்ற மக்கள் ஆணை எதுவென்று விவரிக்கின்ற பகுதி அங்கே இருக்கிறது. அது மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறது.

ஏனெனில் தற்போது கச்சாத்திடும் பிரதிநிதிகள் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள். இதனால் இறுதியிலும் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு கையளிக்கப்பட இருந்த கடிதம் 12 ஆம் திகதி கொடுப்பதாக இருந்தது. ஆனால் 11 ஆம் திகதி கொடுப்பதாக இருந்தது ஆனால் துரதிஷ்டவசமாக 10 ஆம் திகதியன்று இந்திய தூதுவர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.

இந்த சந்தர்ப்பத்திலே இப்படியான ஒரு கடிதம் கொடுக்கப்பட வேண்டுமா என்பதற்கு நான் பதில் சொல்ல முடியாது. அது சம்பந்தமாக எனது மனதிலும் பலவிதமான கேள்விகள் இருக்கின்றன ஏன் இப்படியான தருணத்தில் இப்படியான முயற்சி முன்னெடுக்கப்பட்டது என்பதற்கு விடை எங்களுக்கு தெரியாது. அதை முன்னெடுத்தவர்களிடம்தான் கேட்கவேண்டும். காட்சிகள் எல்லாம் சேர்ந்து ஒரே விடயத்தை ஒரே குரலில் வலியுறுத்தி முன்வைத்து ஒரு முக்கியமான நிகழ்வு. அந்த ஒரு ஒற்றுமையை குலைக்க வண்ணமாக மக்களது அரசியல் அபிலாசைகளை எந்த வண்ணமும் குறைக்காத வண்ணமாக இலங்கை தமிழரசுக்கட்சி இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றி இருக்கின்றோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் அக் கட்சியின் உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: ம.ஆ.சுமந்திரன், இந்தியா, இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், யாழ்ப்பாணம், வடமராட்சிபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE