Thursday 20th of January 2022 08:27:12 AM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கையின் நம்பகமான பங்காளியாக இந்தியா எப்போதும் இருக்கும் - இந்திய வெளிவிவகார அமைச்சர்

இலங்கையின் நம்பகமான பங்காளியாக இந்தியா எப்போதும் இருக்கும் - இந்திய வெளிவிவகார அமைச்சர்


நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதனை இந்திய வெளிவிவகார அமைச்சர் தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இலங்கையின் உறுதியான மற்றும் நம்பகமான பங்காளியாக இந்தியா எப்போதும் இருக்கும் என்பதை மீள உறுதிப்படுத்துவதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பது தொடர்பில் இதன்போது வலியுறுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த முக்கியமான தருணத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்காக ஏனைய உலக நாடுகளின் முயற்சிகளுடன் இணைந்து செயற்படுவதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE