Tuesday 23rd of April 2024 09:21:37 PM GMT

LANGUAGE - TAMIL
.
வவுனியா குருக்கள் புதுக்குளத்தில் விபத்தில் தந்தையும் மகனும் பரிதாப பலி! - ஊர்மக்கள் திரண்டமையால் குழப்பம்!

வவுனியா குருக்கள் புதுக்குளத்தில் விபத்தில் தந்தையும் மகனும் பரிதாப பலி! - ஊர்மக்கள் திரண்டமையால் குழப்பம்!


வவுனியா குருக்கள்புதுக்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலியாகினர். இதனையடுத்து ஆத்திரமடைந்த கிராமமக்கள் ஒன்றுதிரண்டமையால் குறித்த பகுதியில் பதட்டநிலை ஏற்ப்பட்டது.

வவுனியா குருக்கள்புதுக்குளம் பகுதியில் மன்னார் பறயநாலங்குளம் பிரதான வீதியில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றது.

விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்....

மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி வருகைதந்து கொண்டிருந்த தனியார் பேருந்து குருக்கள் புதுக்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது உள் வீதியில் இருந்து பிரதான வீதிக்கு ஏறிய மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்ற தந்தை சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியாகியகியதுடன், அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

இவ் விபத்தினால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பேருந்தினை தாக்கியமையால் குறித்த பகுதியில் பதட்டநிலை ஏற்ப்பட்டது. சம்பவ இடத்திற்கு வருகைதந்த பூவரசங்குளம் பொலிசார் நிலமையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர் எனினும் அது பலனளிக்காத நிலையில் விசேட அதிரடிப்படையினர் களத்திற்கு அழைக்கப்பட்டு நிலமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

சம்பவத்தில் குருக்கள்புதுக்குளம் பகுதியை சேர்ந்த பு.சிறிதரன் வயது 46 மற்றும் அவரது 14 வயது மகனான டினோகாந் ஆகிய இருவருமே மரணமடைந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை குறித்த செய்தியினை சேகரிக்கச்சென்ற தனியார் தொலைக்காட்சி ஊடகவியலாளர் செய்தியினை சேகரிப்பதற்கு சிலரினால் இடையூறு ஏற்படுத்தப்பட்டதுடன், அவரது கமராவும் அடித்து நொறுக்கப்பட்டது.

இது தொடர்பாக குறித்த ஊடகவியலாளரினால் வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடததக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE