ஜப்பான் விண்வெளி ஆய்வு மையமான JAXA மற்றும் ஜப்பான் கார் தாயரிப்பு நிறுவனமான டொயோட்டா ஆகிய இரு நிறுவனங்களும் சேர்ந்து நிலவில் பயணிக்கும் வகையில் புதிய ரோவர் வகை கார் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக JAXA மற்றும் டொயோடா ஆகிய நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம் ஒன;று கையெழுத்தாகியுள்ளது.
குறித்த வாகனம் 2 பேர் பயணிக்கும் வகையில் இருக்குமெனவும் அதே வேளை அவசர காலங்களில் 4 பேர் வரை பயணிக்கும் வகையிலும் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரிய ஒளியால் இயங்கும் வகையில் இந்த வாகனம் இருப்பதாகவும் இந்த வாகனம் தொடர்ந்து 10 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கக்கூடியதாக உருவாக்கப்படவுள்ளது. இந்த வாகனம் 6 மீட்டர் நீளம் 5.2 மீட்டர் அகலம் மற்றும் 3.8 மீட்டர் உயரமும் கொண்டதாக அமைக்கப்படவுள்ளது.
இந்நிலையில் குறித்த கார் 2029 ஆம் ஆண்டு சந்தைப்படுத்தப்படும் என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: தொழில்நுட்பம், பகுப்பு
Tags: