Thursday 7th of December 2023 05:12:59 AM GMT

LANGUAGE - TAMIL
சந்திரனில் கனேடிய கொடியை நாட்ட தயாராகும் முதல் விண்வெளி வீரர்கள்!

சந்திரனில் கனேடிய கொடியை நாட்ட தயாராகும் முதல் விண்வெளி வீரர்கள்!


கனடாவின் இரண்டு புதிய விண்வெளி வீரர்களான ஜென்னி சைடி-கிப்பன்ஸ் மற்றும் ஜோசுவா குட்ரிக் ஆகியோர் நாசாவில் பயின்று விண்வெளி வீரர்களுக்கான பயிற்சியை முடித்து பட்டம் பெற்றுள்ளனர்.

இதன்மூலம் அவர்கள் விண்வெளிப் பயணத்திற்கு அதிகாரப்பூர்வ தகுதியைப் பெற்றுள்ளனர்.

மேலும் சந்திரனில் கால் பதிக்கவுள்ள முதல் கனேடியர்களாக இவர்கள் இடம்பெறுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

2024-க்குள் சந்திரனுக்கு விண்வெளி வீரர்களை அனுப்புதல் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதற்கான கனடாவின் திட்டத்தின் ஒரு படியாக இவர்களின் பயிற்சி அமைந்துள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ரோபோடிக்ஸ் அமைப்புகளை இயக்குவது, விண்வெளி நடைபயிற்சி என்பன உள்ளிட்ட தேவையான திறன்களை இருவரும் கற்றுத்தேறியுள்ளனர்

புதிய விண்வெளி வீரர்கள் இருவரும் சந்திரனுக்குச் செல்வதற்கான தங்கள் கனவுகளை ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

'சந்திரனில் ஒரு கனேடியக் கொடியைக் நாட்டுவது குறித்த சிந்தனையைத் தவிர வேறு ஒரு சிந்தனையும் என்னிடம் இல்லை' என கனேடிய விண்வெளி வீரர் குட்ரிக் கூறுகிறார். அந்த நாள் விரைவில் வரும் எனவும் அவர் கூறினார்.

கனடாவின் முதல் விண்வெளி வீரர்களாக சைடி-கிப்பன்ஸ் மற்றும் குட்ரிக் ஆகியோர் 2017 இல் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சைடி-கிப்பன்ஸ் முன்பு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் உதவி பேராசிரியராக இருந்தவராவார்.

குட்ரிக் ரோயல் கனேடிய விமானப்படை லெப்டினன்ட்-கேணல் தர வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

IMAGE_ALT

IMAGE_ALT


Category: தொழில்நுட்பம், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE