Tuesday 23rd of April 2024 06:33:09 AM GMT

LANGUAGE - TAMIL
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? -08.02.2020

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? -08.02.2020


மேஷம்

மேஷம்: எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். நண்பர்களால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலமாக லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகள் சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். முயற்சியால் முன்னேறும் நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தில் கலகலப் பான சூழல் உருவாகும். பழையபிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்றுவருவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப் பார்கள். நிம்மதிகிட்டும் நாள்.

கடகம்

கடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பலமுறை அலைந்து முடிப்பீர்கள். உங்கள் அணுமுறையை மாற்றுவது நல்லது. வியாபாரத்தில் லாபம் ஈட்ட போராடவேண்டியிருக்கும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்

சிம்மம்

சிம்மம்: கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.

கன்னி

கன்னி: குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசி மகிழ்வீர்கள். மற்றவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்கள் முக்கியத்துவம் அதிகரிக்கும். புகழ் கூடும் நாள்.

துலாம்

துலாம்: உங்கள் செயலில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். புதுதொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றி பெறும். உத்தியோகத்தில் மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள். சாதிக்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: புதிய பாதையில் பயணிக்கத்தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். வெளியூர் பயணங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிட்டும். மாற்றங்கள் நிறைந்த நாள்.

தனுசு

தனுசு: சந்திராஷ்டமம் தொடர்வதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுத்து செயல்படுங்கள். முன்கோபத்தை குறையுங்கள். உங்களுடைய பலம் பலவீனம் அறிந்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வது நல்லது. கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தாருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். மனைவியின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வீட்டிற்கு தேவையான வசதியை மேம்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். நல்லன நடக்கும் நாள்.

கும்பம்

கும்பம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். அமோகமான நாள்.

மீனம்

மீனம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பழைய கடன்பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.


Category: வாழ்வு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE