Friday 29th of March 2024 04:33:43 AM GMT

LANGUAGE - TAMIL
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? -26.02.2020

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? -26.02.2020


மேஷம்

மேஷம்: உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக்காட்டுவீர்கள். உறவினர்கள் நண்பர்களால் ஆதாயம் உண்டு. திடீர் சந்திப்புகள் நிகழும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். சாதித்து காட்டும் நாள்.

மிதுனம்

மிதுனம்: உற்சாகமாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் இருந்த கூச்சல் குழப்பம் விலகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திவரும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

கடகம்

கடகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். யாரையும் தூக்கி எரிந்து பேசாதீர்கள். மற்றவர்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

சிம்மம்

சிம்மம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். திருமண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். எதிர்பாராத நன்மைகள் கிட்டும் நாள்.

கன்னி

கன்னி: பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்குகள் சாதகமாகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார். திடீர் யோகம் கிட்டும் நாள்.

துலாம்

துலாம்: குடும்ப வருமானத்தை உயர்த்துவதற்கான வழிகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நண்பர்களின் உதவி கிடைக்கும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாக கிடைக்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். கனவுகள் நனவாகும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு. தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்ப்புகள் விலகும் நாள்.

தனுசு

தனுசு: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவரின் தொடர்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுத்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சூழச்சிகளை உணர்வீர்கள். வெற்றி பெரும் நாள்.

மகரம்

மகரம்: கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகாரிக்கும். தள்ளிப்போன விசேஷங்கள் உடனே முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதியபாதை தெரியும் நாள்.

கும்பம்

கும்பம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உங்களின் ஈகோ பிரச்சினை அதிகரிக்கும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைகளை பார்க்க வேண்டி இருக்கும். விட்டுக் கொடுத்து போக வேண்டிய நாள்.

மீனம்

மீனம்: எளிதில் முடித்து விடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியாக முடிக்க வேண்டி இருக்கும். சிலர் உங்களை தாழ்த்தி பேசினாலும் கலங்காதீர்கள். சகோதரர்களைப் பகைத்து கொள்ளவேண்டாம். வரவுக்கு மிஞ்சின செலவு இருக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


Category: வாழ்வு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE