Thursday 8th of June 2023 01:13:38 PM GMT

LANGUAGE - TAMIL
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? -13.03.2020

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? -13.03.2020


மேஷம்

மேஷம்: குடும்பத்தில் ஆரோக் கியமான விவாதங்கள் வந்து போகும். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத் தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவல கத்தில் மரியாதை கூடும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை கையாண்டு வெற்றி பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்

ரிஷபம்: சந்தர்ப்ப சூழ்நிலை யறிந்து செயல்படுவீர்கள். சாமர்த்தியத்தை கற்றுக் கொள்வீர்கள். பிள்ளைகளால் புகழ் கௌரவம் உயரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தி யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர் கள். திடீர் யோகம் தேவைப்படும் நாள்.

மிதுனம்

மிதுனம்: மற்றவர்களை நம்பிஎந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர் கள். உறவினர்களில் உண்மை யானவர்களை கண்டறிவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணர் வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கனவு நனவாகும் நாள்.

கடகம்

கடகம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.

சிம்மம்

சிம்மம்: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.

கன்னி

கன்னி: மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நேர்மறை எண்ணம் பிறக்கும். உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். நிம்மதியான நாள்.

துலாம்

துலாம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்து செயல்படுவது நல்லது. வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச் சுமை குறையும். விழிப்புடன் செயல்பட வேண் டிய நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: மறைமுக விமர்சனங் களும் தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். பல விஷயங் களில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கூடும். அலைச்சலுடன் ஆதாயம் ஏற்படும் நாள்.

தனுசு

தனுசு: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் விஐபிக்கள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சிறப்பான நாள்.

மகரம்

மகரம்: ஆசைகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்களின் பிரச் னையை தீர்த்து வைப்பீர்கள். வீடு வாகனத்தை சரி செய்வீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

கும்பம்

கும்பம்: உங்கள் செயலில் வேகம் கூடும். புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப் பார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். உழைப்பால் உயரும் நாள்.

மீனம்

மீனம்: சந்திராஷ்டமம் இருப்பதால் திட்டமிடாத செலவுகளும் பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். பொறுமை தேவைப்படும் நாள்.


Category: வாழ்வு, பகுப்பு
Tags:பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE