Friday 30th of September 2022 03:33:32 AM GMT

LANGUAGE - TAMIL
ராசிபலன்
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 01.04.2020

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 01.04.2020


இன்று! விகாரி வருடம், பங்குனி மாதம் 19ம் திகதி, ஷாபான் 6ம் திகதி, 1.4.2020 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி இரவு 10:38 வரை, அதன்பின் நவமி திதி, திருவாதிரை நட்சத்திரம் பகல் 2:54 வரை, அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை மணி 9.00 முதல் காலை 10.30 மணி வரை. ராகு காலம் : பிற்பகல் மணி 12.00 முதல் பிற்பகல் 1.30 மணி வரை. எமகண்டம் : காலை மணி 7.30 முதல் காலை 9.00 மணி வரை. குளிகை : காலை மணி 10.30 முதல் பிற்பகல் 12.00 மணி வரை. சூலம் : வடக்கு

பரிகாரம் : பால் சந்திராஷ்டமம் : கேட்டை, மூலம் பொது புதுக்கணக்கு எழுத நல்ல நேரம் காலை 9:00 - 10:30 மணி, கரிநாள்

-

மேஷம்

மேஷம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். தைரியம் கூடும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளின் புதிய முயற்சிகளை ஆதரிப்பீர்கள். ஆடை ஆபரணம் சேரும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதுபொறுப்புகள் வரும். மனநிறைவு கிட்டும் நாள்.

மிதுனம்

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். நாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும்தரவேண்டாம். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

கடகம்

கடகம்: எளிதாக முடிய வேண்டிய விஷயங்களை கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். தாழ்வுமனப்பான்மை தலை தூக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டியநாள்.

சிம்மம்

சிம்மம்: வீரியத்தை விட காரியம் தான் பெரிது என்பதை உணர்வீர்கள். பெற்றோரின் ஆதரவு பெருகும். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலியவந்து பேசுவார்கள். வெளியூரிலிரு ந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழையவாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

கன்னி

கன்னி: உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வாகனத்தை சீர்செய்வீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உங்கள் வேலைகளை சுறுசுறுப்பாக முடித்துக் காட்டுவீர்கள். திட்டங்கள் நிறைவேறும் நாள்.

துலாம்

துலாம்: உங்கள் செயலில் வேகம்கூடும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சிலர்உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மறதியால் பிரச்னைகள் வந்துநீங்கும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டாம். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வது நல்லது. தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டிய நாள்.

தனுசு

தனுசு: தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். திருமணப் பேச்சுவார்த்தை கைகூடி வரும். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். புது நட்பு மலரும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர் வருகையால் வீடுகளை கட்டும். பயணங்களால் பயனடைவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. அமோகமான நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். பழைய கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். புதுமை படைக்கும் நாள்.

மீனம்

மீனம்: எதிர்பார்ப்புகள் தடையின்றி முடிவடையும். நட்பு வட்டம் விரிவடையும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் அமைதி நிலவும். உயர்வு பெறும் நாள்.


Category: ஜோதிடம், புதிது
Tags:பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE