Thursday 21st of September 2023 11:22:37 PM GMT

LANGUAGE - TAMIL
ராசிபலன்
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 02.04.2020

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 02.04.2020


இன்று!

விகாரி வருடம், பங்குனி மாதம் 20ம் திகதி, ஷாபான் 7ம் திகதி, 2.4.2020 வியாழக்கிழமை, வளர்பிறை, நவமி திதி இரவு 9:29 வரை, அதன்பின் தசமி திதி, புனர்பூசம் நட்சத்திரம் பகல் 2:36 வரை, அதன்பின் பூசம் நட்சத்திரம், அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை மணி 10.30 முதல் காலை 12.00 மணி வரை. ராகு காலம் : பிற்பகல் மணி 1.30 முதல் பிற்பகல் 3.00 மணி வரை. எமகண்டம் : காலை மணி 6.00 முதல் காலை 7.30 மணி வரை. குளிகை : காலை மணி 9.00 முதல் காலை 10.30 மணி வரை. சூலம் : தெற்கு

• பரிகாரம் : தைலம் • சந்திராஷ்டமம் : மூலம், பூராடம் • பொது ஸ்ரீராமநவமி, ஷீரடி சாய்பாபா பிறந்தநாள்.

மேஷம்

மேஷம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். அரசால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உற்சாகமான நாள்.

மிதுனம்

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் இருப் பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். சிலரின் தவறுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. இடம்பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

கடகம்

கடகம்: சில காரியங்களை அலைந்துதிரிந்து முடிக்க வேண்டி வரும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல், வீண் செலவுகள் வந்து போகும். தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.

சிம்மம்

சிம்மம்: சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். பெற்றோரின் ஆதரவு பெருகும். காணாமல்போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத் தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மகிழ்ச்சியான நாள்.

கன்னி

கன்னி: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர்கள் நண்பர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில்சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தில் இதுவரை இருந்த தயக்கம் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். கேட்ட இடத்தில் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக் கும். வியாபாரத்தில் புது தொடர்புகளால் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். உத்யோகத்தில் நெருக்கடிகள் வந்து நீங்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

தனுசு

தனுசு: பிள்ளைகள் கேட்டதைவாங்கித் தருவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். நன்மைகிட்டும் நாள்.

மகரம்

மகரம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். அமைதியான நாள்.

கும்பம்

கும்பம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடிவரும். கனவு நனவாகும் நாள்.

மீனம்

மீனம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வீடு வாகனப்பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


Category: ஜோதிடம், புதிது
Tags:பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE