Thursday 7th of December 2023 03:30:05 AM GMT

LANGUAGE - TAMIL
ராசிபலன்
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 15.04.2020

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 15.04.2020


இன்று! சார்வரி வருடம், சித்திரை மாதம் 2ம் திகதி, ஷாபான் 20ம் திகதி, 15.4.2020 புதன்கிழமை, தேய்பிறை, அஷ்டமி திதி இரவு 9:58 வரை, அதன்பின் நவமி திதி, உத்திராடம் நட்சத்திரம் நள்ளிரவு 1:35 வரை, அதன்பின் திருவோணம் நட்சத்திரம், அமிர்த - சித்தயோகம்

நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. ராகு காலம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல 1.30 மணி வரை. எமகண்டம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. குளிகை : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை. சூலம் : வடக்கு

• பரிகாரம் : பால் • சந்திராஷ்டமம் : மிருகசீரிடம், திருவாதிரை • பொது தேய்பிறை அஷ்டமி, பைரவர் வழிபாடு.

மேஷம்

மேஷம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள் மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: புதிய பாதையில் பயணிக்க தொடங்குவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்று கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். மனசாட்சி படி செயல்படும் நாள்.

மிதுனம்

மிதுனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டிவரும். உத்தியோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.

கடகம்

கடகம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப்பேச்சு வார்த்தை வெற்றியடையும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் புது முயற்சியை அதிகாரி ஆதரிப்பார்.தொட்டது துலங்கும் நாள்.

சிம்மம்

சிம்மம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்துஎல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.

கன்னி

கன்னி: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்துகொள்வீர்கள். கடையை விரிவு படுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

துலாம்

துலாம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வந்து நீங்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். மகிழ்ச்சியான நாள்.

தனுசு

தனுசு: தன் குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்லசெய்தி வரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதுமுதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

மகரம்

மகரம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். கவனமாக இருக்க வேண்டிய நாள்.

கும்பம்

கும்பம்: மறைமுக விமர்சனங்களும் எதிர்காலம் பற்றிய பயம் வந்து நீங்கும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வாகனத்தில் செல்லும்போதும், சாலைகளை கடக்கும் போதும் கவனம் தேவை. யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம் வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு அடைவீர்கள். அதிக உழைக்க வேண்டிய நாள்.

மீனம்

மீனம்: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் கடமை உணர்வுடன்செயல்பட்டு லாபம் பெறுவீர்கள். கடுமையாக உழைக்கவேண்டிய நாள்.


Category: ஜோதிடம், புதிது
Tags:பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE