Thursday 21st of September 2023 11:07:20 PM GMT

LANGUAGE - TAMIL
ராசிபலன்
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 17.04.2020

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 17.04.2020


இன்று! சார்வரி வருடம், சித்திரை மாதம் 4ம் திகதி, ஷாபான் 22ம் திகதி, 17.4.2020 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, தசமி திதி இரவு 11:33 வரை, அதன்பின் ஏகாதசி திதி, அவிட்டம் நட்சத்திரம் நாளை அதிகாலை 4:34 வரை, அதன்பின் சதயம் நட்சத்திரம், சித்தயோகம்

நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. ராகு காலம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை. எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை. குளிகை : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. சூலம் : மேற்கு

• பரிகாரம் : வெல்லம் • சந்திராஷ்டமம் : பூசம் • பொது முகூர்த்தநாள், அம்பிகை வழிபாடு.

மேஷம்

மேஷம்: வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். வாகனங்களால் ஆதாயம் உண்டு. வீடு வாங்குவதற்காகக் கடன் பட வேண்டிய சூழல் ஏற்படலாம். யார் என்ன சொன்னாலும் உங்கள் பணியை செய்து கொண்டே இருங்கள்.

ரிஷபம்

ரிஷபம்: மனைவியின் அன்பான வார்த்தைகள் உங்களை உற்சாகப்படுத்தும். எதிர்பாராத வரவால் குடும்பத் தேவை பூர்த்தியாகும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். உடல் நலத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை எட்டுவீர்கள்.

மிதுனம்

மிதுனம் : குடும்பத்தில் நிகழும் சுபநிகழ்ச்சிக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். தற்காலிக தோல்விகளை அவமானம் என்று எண்ணி வருந்த வேண்டாம். மாணவர்கள் படிப்புடன் விளையாட்டிலும் சிறந்து விளங்குவர்.

கடகம்

கடகம்: எடுத்த முயற்சிகள், பங்குபெறும் போட்டிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோக விஷயமாக கடல் கடந்து செல்லும் வாய்ப்பை பெறுவீர்கள். குடும்பத்தில் சிறியளவு பிரச்னை வந்து போகும். கடுமையான வார்த்தைகளை எங்கும் பயன்படுத்த வேண்டாம்.

சிம்மம்

சிம்மம் : எடுத்த முயற்சிகளில் சிறு அளவில் தாமதம் ஏற்படும். எதிலும் கவனமாக செயல்படுங்கள். சமூகத்தில் உங்கள் மீதான மதிப்பு, மரியாதை உயரும். எதிர்பாராத லாபங்களை பெறுவீர்கள். வெளிநாட்டில் உள்ள உறவினர்களின் உதவி கிடைக்கும்.

கன்னி

கன்னி: மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பீர்கள். நிதி முதலீடு லாபம் தரும். தாய் வழி உறவினர்களுடனான நெருக்கம் அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். பணியிடத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள்.

துலாம்

துலாம்: எல்லோரிடமும் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வீர்கள். மேலதிகாரிகளுடன் இணக்கமான உறவைக் கடைபிடிப்பீர்கள். பணியிடத்தில் கவனம் தேவை. திட்டமிட்ட இலக்குகளை அடைய பொறுமையுடன் இருப்பது நல்லது. நல்லவர்களின் ஆசி கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்: சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் உடல் நலத்தில் அக்கறை தேவை. தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி உண்டு. உறவினர், நண்பருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள்.

தனுசு

தனுசு: கடினமான பணிகளை கூட சுலபமாக செய்து முடிப்பீர்கள். யாருக்காகவும் மற்றவர்களிடம் வாக்கு கொடுக்க வேண்டாம். கடன் பெறுவதை தவிர்க்கவும். தடைகள் வந்தாலும் உடைத்தெறியும் ஆற்றலை பெறுவீர்கள். வெளிநாடு சம்பந்தப்பட்ட வேலை கிடைக்கும்.

மகரம்

மகரம்: பெரிதாக வெற்றி கிட்டவில்லை என்றாலும் தோல்வி இல்லை. குளிர்ச்சியான உணவுகளை சாப்பிட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உள்ள தேக்கநிலை விரைவில் சரியாகும். மனதிற்கு பிடித்தவர்களிடம் மன்னிப்புக் கேட்டு நட்பைப் புதுப்பிப்பீர்கள்.

கும்பம்

கும்பம்: மற்றவர்கள் மீது அதிக நம்பிக்கை வைக்க வேண்டாம். மனதில் நேர்மறையான எண்ணங்கள் தோன்றும். திறமைகளை சிறந்த முறையில் பயன்படுத்தினால் முன்னேற்றம் கிட்டும். விவாதங்களை தவிர்ப்பதால் மன உளைச்சலை தடுக்கலாம்.

மீனம்

மீனம்: மனதுக்கு நெருக்கமானவர்களிடம் வீண் சந்தேகம் இருக்கக் கூடாது. ரகசியங்களை பகிராமல் இருப்பது நல்லது. உடல் நலத்தில் கூடுதல் அக்கறை தேவை. தன்னம்பிக்கை நிறைந்த எண்ணங்கள் காணப்படும். மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள்.


Category: ஜோதிடம், புதிது
Tags:பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE