Wednesday 29th of November 2023 01:22:22 PM GMT

LANGUAGE - TAMIL
ராசிபலன்
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 22.04.2020

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 22.04.2020


இன்று! சார்வரி வருடம், சித்திரை மாதம் 9ம் திகதி, ஷாபான் 27ம் திகதி, 22.4.2020 புதன்கிழமை, தேய்பிறை, சதுர்த்தசி திதி காலை 6:50 வரை, அதன்பின் அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம் பகல் 2:12 வரை, அதன்பின் அசுவினி நட்சத்திரம், மரணயோகம்

நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. ராகு காலம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல 1.30 மணி வரை. எமகண்டம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. குளிகை : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை. சூலம் : வடக்கு

• பரிகாரம் : பால் • சந்திராஷ்டமம் : உத்திரம், அஸ்தம் • பொது: அமாவாசை விரதம், முன்னோர் வழிபாடு.

மேஷம்

மேஷம்: அரசாங்க ஊழியர்களுக்கு பணியிட மாற்றம் உண்டாகும். நிலம், வீடு வகையில் நன்மை கிடைக்கும். கமிஷன் ஒப்பந்தத் தொழிலில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். முக வசீகரம் அதிகரிக்கும். பெண்கள் நகை, புத்தாடை வாங்குவதில் ஆர்வம் கொள்வர்.

ரிஷபம்

ரிஷபம்: மன சிந்தனை தெளிவாக இருக்கும். எதிர்பார்த்திருந்த சுபமங்கல தகவல் வந்து சேரும். வீடு கட்டும் எண்ணம் நிறைவேறும். புதிதாக வாகனம் வாங்கும் யோகம் உருவாகும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். கல்வி நிலை சிறப்படையும்.

மிதுனம்

மிதுனம் : சகோதர வகையில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். நல்லவர்களின் ஆசியை பெறுவீர்கள். உறவினர் வருகையால் வீடு களைகட்டும். விலை உயர்ந்த மின்சார சாதனங்களை வாங்குவீர்கள்.

கடகம்

கடகம்: வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். பணியிடத்தில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டைப் பெறுவீர்கள். வீடு, மனைகளை விற்பது கூடுதல் லாபத்தை கொடுக்கும். உறவினர்கள் உங்களின் பெருந்தன்மையை புரிந்து கொள்வார்கள்.

சிம்மம்

சிம்மம் : புதியவர்களின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். பூர்வ சொத்து கைக்கு வந்து வரும். குடும்பத்தினருடன் சேர்ந்திருக்கும் நேரம் குறையும். உடல் உஷ்ணத்தால் ஆரோக்கியம் சிறு அளவில் பாதிக்கும். பணிச்சுமை அதிகரிக்கும். எதிரிகள் மனம் மாறுவார்கள்.

கன்னி

கன்னி: பேச்சு, செயல், கையெழுத்துப் போடுதல் என எல்லாவற்றிலும் கவனம் தேவை. மற்றவர் விஷயங்களில் தலையிட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர்.

துலாம்

துலாம்: சிலருக்கு வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கடன்களைத் தீர்ப்பதற்கான வழிவகைகள் பிறக்கும். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீண்ட கால பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்: மனதில் தைரியம் அதிகரிக்கும். சுயமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பெரிய பொறுப்புகளில் இருக்கும் பழைய நண்பர்களின் மூலம் சில உதவிகளை பெறுவீர்கள். இளைய சகோதர வகையில் நன்மைகள் ஏற்படும். வழக்குகள் சாதகமாக முடியும்.

தனுசு

தனுசு: வீண் அலைச்சல்கள் இருக்கும். திடீர்ப் பயணங்கள் ஏற்படும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். யாரைப் பற்றியும் பிறரிடம் புகார் கூற வேண்டாம். மேலதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. கடமைகளை முடித்து நிம்மதியும் பெருமிதமும் அடைவீர்கள்.

மகரம்

மகரம்: தந்தை வழி சொத்துகளில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். சுபச்செலவுகளை செய்து மகிழ்வீர்கள். வீட்டுத் தேவைகள் அதிகரிக்கும். சிறு அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். மாணவர்கள் படிப்புடன் கலைகளையும் ஆர்வமாக பயில்வர்.

கும்பம்

கும்பம்: மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. உங்கள் பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். முக்கிய ஆவணங்களில் கையெழுத்துப் போடும் முன்பாக விஷயம் தெரிந்தவர்களின் ஆலோசனையைக் கேட்பது பல வகையில் நன்மை தரும்.

மீனம்

மீனம்: மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். பயணத்தின் போது பொருட்களை பாதுகாப்பதில் அதிக கவனம் தேவை. நீண்ட காலமாக உங்களுடன் பழகிய நண்பர்களை விட்டுத் தற்காலிகமாகப் பிரிய நேரிடும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.


Category: ஜோதிடம், புதிது
Tags:பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE