Tuesday 4th of October 2022 07:29:01 AM GMT

LANGUAGE - TAMIL
ராசிபலன்
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 13.05.2020

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 13.05.2020


இன்று! சார்வரி வருடம், சித்திரை மாதம் 30ம் திகதி, ரம்ஜான் 19ம் திகதி, 13.5.2020 புதன்கிழமை, தேய்பிறை, சஷ்டி திதி காலை 10:36 வரை, அதன்பின் சப்தமி திதி, உத்திராடம் நட்சத்திரம் காலை 9:11 வரை, அதன்பின் திருவோணம் நட்சத்திரம், அமிர்த - சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. ராகு காலம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல 1.30 மணி வரை. எமகண்டம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. குளிகை : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை. சூலம் : வடக்கு

• பரிகாரம் : பால் • சந்திராஷ்டமம் : திருவாதிரை • பொது: முகூர்த்த நாள், திருவோண விரதம், பெருமாள் வழிபாடு

மேஷம்

மேஷம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உறவினர் நண்பர்களால் அனுகூலம் உண்டு. பிரிய மானவர்களுக்காக சிலவற்றை விட்டுகொடுப்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர் களின் உணர்வுகளுக்கு மதிப் பளிப்பீர்கள். கைமாற்றாக வாங்கி யிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நட்பு வட்டம் விரியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப் பார்கள். நிம்மதி கிட்டும் நாள்.

மிதுனம்

மிதுனம்: சந்திராஷ்டமம் தொடர் வதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் குறை, நிறைகளை எடுத்து சொன்னால் கோபப்படாதீர்கள். மற்றவர்கள் பிரச்சினையில் தலையிடுவதால் வீண் பழிச் சொல் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்து கொள்ளுங்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

கடகம்

கடகம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். பழைய பிரச்னை களை தீர்ப்பீர்கள். மனைவி வழிஉறவினர்களின் ஆதரவு கிடைக்கும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் வேலை யாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீடு வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அமோகமான நாள்.

கன்னி

கன்னி: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில்தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.

துலாம்

துலாம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும், ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப் பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தில் உடன் உள்ளவர்களுடன் கலந்தாலோ சித்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வாகன வசதிப்பெருகும் உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். மாறாக தைரியம் கூடும் நாள்.

தனுசு

தனுசு: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட் களை வாங்கி மகிழ்வீர்கள். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சிபடி செயல் படும் நாள்.

மகரம்

மகரம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில விஷயங்களில் திட்ட மிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். எதிலும் உணர்ச்சி வசப்படாமல் இருப்பது நல்லது. யாரும் உங்களை அறிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுமை தேவைப்படும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தில் உள்ளவர்களிடம் மனம் விட்டுப் பேசுவது நல்லது.உடல்நலம் பாதிக்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் வேலை யாட்களால் பிரச்னை வரக்கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மீனம்

மீனம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வராது என்றிருந்த பணம்வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். நீண்ட நாட்களாக பார்க்கநினைத்த ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். புகழ் கௌரவம் கூடும் நாள்.


Category: ஜோதிடம், புதிது
Tags:பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE