Tuesday 4th of October 2022 08:23:34 AM GMT

LANGUAGE - TAMIL
ராசிபலன்
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 20.05.2020

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 20.05.2020


இன்று! சார்வரி வருடம், வைகாசி மாதம் 7ம் திகதி, ரம்ஜான் 26ம் திகதி, 20.5.2020 புதன்கிழமை, தேய்பிறை, திரயோதசி திதி இரவு 9:03 வரை, அதன்பின் சதுர்த்தசி திதி, அசுவினி நட்சத்திரம் இரவு 11:53 வரை, அதன்பின் பரணி நட்சத்திரம், மரண - சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. ராகு காலம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல 1.30 மணி வரை. எமகண்டம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. குளிகை : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை. சூலம் : வடக்கு

• பரிகாரம் : பால் • சந்திராஷ்டமம் : உத்திரம், அஸ்தம் • பொது: பிரதோஷம், மாதசிவராத்திரி, சிவன் வழிபாடு, கரிநாள்.

மேஷம்

மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும் பத்தாருடன் ஈகோ பிரச்சினைகள் வந்து நீங்கும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி இருக்கும். விட்டு கொடுத்துப் போக வேண்டிய நாள்.

ரிஷபம்

ரிஷபம்: எளிதில் முடித்து விடலாம் என நினைத்த காரியங்கள் கூட காலதாமதமாக முடியும் சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். சகோதரர்களை பகைத்து கொள்ள வேண்டாம். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மிதுனம்

மிதுனம்: உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றிக்கொள் வீர்கள். உடன் பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். வியாபா ரத்தில் புதுத் தொழில் தொடங்கும் புதிய முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.

கடகம்

கடகம்: மற்றவர்களால் செய்யமுடியாத செயற்கரிய காரியங் களையெல்லாம் முடித்து காட்டுவீர்கள். உறவினர் நண்பர்களால் ஆதாயமுண்டு. திடீர் சந்திப்புகள் நிகழும்.வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். சாதித்து காட்டும் நாள்.

சிம்மம்

சிம்மம்: உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பம் விலகும். வெளிவட் டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் உங்கள் பேச்சிக்கு மதிப்பு கூடும். சிறப்பாக தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

கன்னி

கன்னி: சந்திராஷ்டமம் தொடர் வதால் வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். மற்றவர்களை முழுமையாக நம்பி கொண்டிருக்க வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்து கொள்ளுங்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

துலாம்

துலாம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்கு வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். எதிர்பாராத நன்மைகள் கிட்டும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: பணப்புழக்கம் அதிகரிக் கும். நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வழக்குகள் சாதகமாகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக் கையை ஏற்பார்கள். யோகம் கிட்டும் நாள்.

தனுசு

தனுசு: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங் களை கற்றுக் கொள்வீர்கள். மன நிறைவு பெறும் நாள்.

மகரம்

மகரம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் புது அனுபவம் உண்டாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயமுண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். வெற்றி பெறும் நாள்.

மீனம்

மீனம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியா பாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்


Category: ஜோதிடம், புதிது
Tags:பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE