Tuesday 4th of October 2022 08:54:19 AM GMT

LANGUAGE - TAMIL
ராசிபலன்
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 24.05.2020

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 24.05.2020


இன்று! சார்வரி வருடம், வைகாசி மாதம் 11ம் திகதி, ரம்ஜான் 30ம் திகதி, 24.5.2020 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை துவிதியை திதி நள்ளிரவு 12:58 வரை, அதன்பின் திரிதியை திதி, மிருகசீரிடம் நட்சத்திரம் நாள் முழுவதும், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. ராகு காலம் : மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை. எமகண்டம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை. குளிகை : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை. சூலம் : மேற்கு

• பரிகாரம் : வெல்லம் • சந்திராஷ்டமம் : விசாகம் • பொது: முகூர்த்த நாள், சந்திர தரிசனம்.

மேஷம்

மேஷம்: கணவன்- மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழப்பங்கள் அனைத்தும் நீங்கி சோர்வு நீங்கி சுறுசுறுப்பு அடைவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வந்து சேரும். நட்பு வட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: சந்திரன் ராசிக்குள் இருப்பதால் சிலர் உங்களை சீண்டிப்பார்ப்பார்கள். உடனே உணர்ச்சிவசப்பட்டு கத்த வேண்டாம் கொஞ்சம்பொறுமையாக இருங்கள். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக்கொள்ளாதீர்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்

மிதுனம்: உணர்ச்சி வேகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். எதிர்மறைஎண்ணங்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போவது நல்லது. அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

கடகம்

கடகம்: ராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பழைய கடனைதீர்க்க ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள் உத்தியோகத்தில்உயரதிகாரி பாராட்டுவார். இனிமையான நாள்.

சிம்மம்

சிம்மம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில்வழி நடத்துவீர்கள். உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீடு வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். திறமை வெளிப்படும் நாள்.

கன்னி

கன்னி: குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். தள்ளிப் போன விஷயங்கள் அனைத்தும் உடனே முடியும். புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. உற்சா கமான நாள்.

துலாம்

துலாம்: சந்திராஷ்டமம் தொடர் வதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். உடல்நலம் பாதிக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: உங்கள் அறி வாற்றலை வெளிப்படுத்த நல்லவாய்ப்பு வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்தபொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவி வழியில் தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

தனுசு

தனுசு: பணப்புழக்கம் அதிகரிக் கும். பழைய உறவினர் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால்அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங் கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள் . உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

மகரம்

மகரம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின்தனித்திறமைகளை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

கும்பம்

கும்பம்: எதிர்ப்புகள் அடங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியம் ஒன்றும் முடியும். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும்நாள்.

மீனம்

மீனம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சகோதரர்களால் பயனடைவீர்கள். அதிகார பதவியில் இருப்பவரின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயமுண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தைரியம் கூடும் நாள்.


Category: ஜோதிடம், புதிது
Tags:பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE