Friday 29th of March 2024 10:31:36 AM GMT

LANGUAGE - TAMIL
ராசிபலன்
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 27.05.2020

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 27.05.2020


இன்று! சார்வரி வருடம், வைகாசி மாதம் 14ம் திகதி, ஷவ்வால் 3ம் திகதி, 27.5.2020 புதன்கிழமை, வளர்பிறை பஞ்சமி திதி இரவு 10:47 வரை, அதன்பின் சஷ்டி திதி, புனர்பூசம் நட்சத்திரம் காலை 6:17 வரை, அதன்பின் பூசம் நட்சத்திரம் அதிகாலை 5:27 வரை, சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. ராகு காலம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல 1.30 மணி வரை. எமகண்டம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. குளிகை : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை. சூலம் : வடக்கு

• பரிகாரம் : பால் • சந்திராஷ்டமம் : மூலம் • பொது: முகூர்த்த நாள், விஷ்ணு வழிபாடு

மேஷம்

மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புதுவேலை கிடைக்கும். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சகஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மனைவி வழியில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். தைரியம் கூடும் நாள்.

மிதுனம்

மிதுனம்: கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

கடகம்

கடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். பண விஷயத்தில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்து கொள்ள வேண்டாம். புதிய முடிவுகள் எடுக்கும் நாள்.

சிம்மம்

சிம்மம்: கணவன்- மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. அரசு காரியங்கள் இழு பறியாகும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். பெருமையுடன் இருக்க வேண்டிய நாள்

கன்னி

கன்னி: எதிர்பார்ப்புகள் நிறை வேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும் வீடு மனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் பாராட்டும் படி நடந்து கொள்வீர்கள். நல்லன நடக்கும் நாள்.

துலாம்

துலாம்: கடந்த கால சுகமான அனுபவங்கள் எல்லாம் மனதில் நிழலாடும். உறவினர் நண்பர்கள் ஆதரவாக பேச தொடங்குவார்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அலுவலகத்தில் மரியாதை கூடும். மதிப்பு மரியாதை கூடும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள் குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். மாற்றங்கள் நிறைந்த நாள்.

தனுசு

தனுசு: சந்திராஷ்டமம் தொடர்வதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். அடுத்தவர்களை குறைக்கூறி கொண்டிருக்காமல் உங்களை மாற்றி கொள்ள பாருங்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் ஈகோ அதிகரிக்கும். வேலைச் சுமை மிகுந்த நாள்.

மகரம்

மகரம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். விலை உயர்ந்த வீட்டிற்கு தேவையான சாதனங்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சீர்செய்வீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிட்டும். நன்மை கிட்டும் நாள் .

கும்பம்

கும்பம்: குடும்பத்தில் உள்ளவர் களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றி கொள்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மீனம்

மீனம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்- பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.


Category: ஜோதிடம், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE