Thursday 18th of April 2024 05:23:15 AM GMT

LANGUAGE - TAMIL
.
சொந்த மண்ணிலும் தொடரும் தோல்விப் பயணம்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா!

சொந்த மண்ணிலும் தொடரும் தோல்விப் பயணம்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா!


தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இலங்கை கிரிக்கெட் அணி சொந்த மண்ணிலும் மிக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது.

சுற்றுலா இந்திய அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்துள்ளது.

தலா மூன்று போட்டிகளை கொண்ட சர்வதேச ஒருநாள் மற்றம் 20-20 தொடரில் விளையாடுவதற்காக இலங்கை வந்துள்ளது இந்திய அணி.

இந்திய - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக நேற்று நடைபெற்றிருந்தது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 262 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அதிகபட்சமாக, சமிக கருணாரத்னே ஆட்டமிழக்காது-43 ஓட்டங்களை பெற்றிருந்ததுடன், அணித்தலைவர் தசுன் சானக 39, அசலங்க-38, அவிஸ்க பெர்னாண்டோ-32 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்திருந்தனர்.

பந்து வீச்சில் தீபக் ஷாகர், குல்தீப் யாதவ், ஷாகல் ஆகியோர் தலா இரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

இதையடுத்து 263 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 36.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இந்திய அணித் தலைவர் ஷிகர் தவான் - சூரியகுமார் யாதவ் ஆகியோர் ஆட்டமிழக்காது முறையே 86, 31 ஓட்டங்களை பெற்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றிருந்தனர்.

முன்னதாக இஷான் கிசன்-59, பிரித்வி ஷா-43, மனிஷ் பாண்டே-26 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்திருந்தனர்.

பந்து வீச்சில் தனஞ்செய டீ சில்வா 2 விக்கெட், சன்டகன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தனர்.

இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக இலங்கை அணியின் எந்தவொரு பந்துவீச்சாளரும் செயற்படாமையினால் நெருக்கடி இன்றி இந்திய அணி வீரர்கள் வெற்றி இலக்கை இலகுவாக எட்டியிருந்தனர்.

இலங்கை அணியின் இளம் சகலதுறை ஆட்டக்காரராக வளர்ந்து வரும் வனிண்டு ஹசரங்க ஒரு ஓட்டமற்ற ஓவர் உள்ளடங்கலாக 9 ஓவர்கள் பந்து வீசி 45 ஓட்டங்களை விட்டுக் கொடுத்திருந்தார். ஏனைய பந்து வீச்சாளர்கள் அதிகமான ஓட்டங்களை விட்டுக் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் பகல்-இரவு போட்டியாக நாளைய தினம் நடைபெற உள்ளது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா, இலங்கை, கொழும்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE