Thursday 18th of April 2024 09:44:39 AM GMT

LANGUAGE - TAMIL
.
20-20 தொடர்: முதலாவது போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தியது தென்னாபிரிக்க அணி!

20-20 தொடர்: முதலாவது போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தியது தென்னாபிரிக்க அணி!


அயர்லாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் சென்றுள்ள தென்னாபிரிக்க அணி அந்நாட்டு அணிக்கு எதிரான முதாலாவது 20-20 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

3 போட்டிகள் கொண்ட 20-20 தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்து சென்றுள்ளது தென்னாபிரிக்க அணி.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது 20-20 போட்டி நேற்றைய தினம் (ஜூலை-19) நடைபெற்றுள்ளது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி தென்னாபிரிக்க அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது.

இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 165 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

அதிகபட்சமாக மர்க்ரம் 39 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

பந்து வீச்சில் மார்க் அடைர் 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

இதையடுத்து 166 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி தென்னாபிரிக்க பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாது சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இறுதிவரை துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 132 ஓட்டங்களை மட்டும் பெற்றிருந்தது.

அதிகபட்சமாக ஹரி ரெக்டர்-36, மக்கர்த்தி-30(ஆட்டமிழக்காது) ஓட்டங்களை பெற்றிருந்தனர்.

அயர்லாந்தின் 7 வீரர்கள் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்து வெளியேறியிருந்தனர்.

பந்து வீச்சில் ஷம்சி 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

இதன் மூலம் 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்று தொடரில் 1:0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

போட்டியின் ஆட்ட நாயகனாக தென்னாபிரிக்க அணியின் ஷம்சி தேர்வு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளுக்கும் இடையிலான 2வது 20-20 போட்டி நாளை மறுதினம் (ஜூலை-22) இடம்பெறவுள்ளது.


Category: விளையாட்டு, புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE