Friday 19th of April 2024 03:13:50 PM GMT

LANGUAGE - TAMIL
.
நடிகர் அஜித்குமார் தாஜ்மஹாலுக்கு திடீர் விசிட்!

நடிகர் அஜித்குமார் தாஜ்மஹாலுக்கு திடீர் விசிட்!


தமிழ்த் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித்குமார் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு சென்றுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

டெல்லியில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள நடிகர் அஜித்குமார் தாஜ்மஹாலுக்கு சென்றுள்ளார்.

நடிகர் அஜித்குமார் திரைத்துறைக்கு அப்பால் விளையாட்டுத்துறையிலும் அதிக ஈடுபாடு உடையவராக உள்ளமை யாவரும் அறிந்ததே.

அந்தவகையில், சமீப காலமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

கடந்த மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு, 6 பதக்கங்களை வென்று அசத்தினார் அஜித்.

மாநில அளவிலான போட்டியில் வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க உள்ளார் அஜித்.

இந்தப் போட்டி விரைவில் டெல்லியில் தொடங்க உள்ளது. இதற்காக சமீபத்தில் டெல்லி சென்ற நடிகர் அஜித், அங்கு தீவிர பயிற்கு மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், பயிற்சியின் இடையில் கிடைத்த ஓய்வு நேரத்தில் நடிகர் அஜித், தாஜ்மஹாலை சுற்றி பார்க்க சென்றுள்ளார். அவரை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள், அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

தாஜ்மஹாலில் அஜித்துடன் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு, புது தில்லி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE