Friday 19th of April 2024 02:41:43 PM GMT

LANGUAGE - TAMIL
.
ரஜினியின் உடல் நிலை குறித்து மருத்துவ அறிக்கை வெளியாகியது!

ரஜினியின் உடல் நிலை குறித்து மருத்துவ அறிக்கை வெளியாகியது!


நடிகர் ரஜினிகாந்திற்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்துக்குஇ நரம்பியல் மற்றும் இருதய துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டபோது ரத்த நாள திசு அழிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், ரஜினிக்கு ஏற்பட்டுள்ள ரத்த நாள பாதிப்பை சரிசெய்யும் சிகிச்சையில் மருத்துவர்கள் ஈடுபட்டு இருப்பதாகவும், நரம்பியல் மற்றும் இருதய துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ரஜினிகாந்த் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால், பிற உறுப்புகளின் செயல்பாடுகளையும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து சிகிச்சைப்பெற்றால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் தற்போது ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையினை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதில், ரத்த நாளத்தில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக ரஜினிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர் வேகமாக குணமடைந்து வருகிறார். ஒரு சில நாட்களில் மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE