Sunday 8th of September 2024 07:39:48 AM GMT

LANGUAGE - TAMIL
.
ராஜ ராஜ சோழன் குறித்த சர்ச்சைக்குரிய பேச்சு; இயக்குநர் பா.ரஞ்சித் வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ராஜ ராஜ சோழன் குறித்த சர்ச்சைக்குரிய பேச்சு; இயக்குநர் பா.ரஞ்சித் வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!


மன்னர் ராஜ ராஜ சோழன் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்த கருத்து கலவரத்தை தூண்டும் விதத்தில் அமைந்திருந்ததாக தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பினை வழங்கியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் திருப்பனந்தாள் என்ற பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் பா.ரஞ்சித் கலந்துகொண்டார். அப்பொது பேசிய ரஞ்சித் மன்னர் ராஜ ராஜ சோழன் பற்றி விமர்சித்தார்.

இது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பா.ரஞ்சித்தின் பேச்சுக்கு சமுக வலைதளங்களிலும் கடுமையான விமர்சங்கள் எழுந்தது. பல இந்து அமைப்புகளும் அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்தன. இதனையடுத்து பா.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலீசார் கலவரத்தைத்தூண்டும் விதமாகப் பேசியதாக வழக்குப்பதிவு செய்தனர்.

வரலாற்று புத்தகங்களில் உள்ள தகவல்களையே குறிப்பிட்டதாக பா.ரஞ்சித் பதில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய விதமாகப் பேசியதாக இயக்குநர் பா.ரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பா.ரஞ்சித் மெட்ராஸ், காலா, கபாலி உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு, மதுரை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE