Wednesday 24th of April 2024 01:56:58 AM GMT

LANGUAGE - TAMIL
.
7 நாட்களுக்கு பின்னர் இறந்தால் கொவிட் மரணமாக கருதப்படாது; புதிய சுகாதார வழிகாட்டி வெளியானது!

7 நாட்களுக்கு பின்னர் இறந்தால் கொவிட் மரணமாக கருதப்படாது; புதிய சுகாதார வழிகாட்டி வெளியானது!


கொவிட் தொற்றுறுதியாகி 7 நாட்களின் பின்னர் இறந்தால் குறித்த மரணம் கொவிட் மரணமாக கருதப்படாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று (5) முதல் அமுலாகும் வகையில் வெளியிடப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டலுக்கு அமைய கொவிட்-19 தொற்று உறுதியாகி 7 நாட்களுக்கு பின்னர் மரணிப்போரது மரணம் கொவிட்-19 மரணமாக கருதப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த மரணங்களின் இறுதி கிரியைகளை தனிமைப்படுத்தல் விதிகளில் இன்றி சாதாரண முறையில் முன்னெடுக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொவிட்-19 தொற்றால் மரணிப்போரின் உடல்களை அடக்கம் செய்யும் நடவடிக்கை அரசாங்கத்தினூடாக மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE