Friday 29th of March 2024 03:09:09 AM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது!

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது!


யாழ். பல்கலையின் துணைவேந்தர் மாணவர்களது போராட்ட இடத்திற்கு சென்று, நாளை (18) காலை 9 தொடக்கம் மாலை 4 மணிவரையான நேரத்திற்குள் மாணவர் ஒன்றியம் அமைப்பதாக உறுதிமொழியை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு, பல்கலைக்கழகத்தின் நுழைவாயில்களை திறந்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அந்தவகையில் நாளையதினம் பிரதான மாணவர் ஒன்றியமும், கலைப்பீட மாணவர் ஒன்றியமும் அமைக்கப்படவுள்ளது.

இறுதி ஆண்டு மாணவர்கள் சிலர் தலைமையில் மூன்றாம் ஆண்டு மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்கள் சிலர் இணைந்து பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளை முடக்கும் வகையில் இன்று காலைமுதல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மாணவர் ஒருவரை பல்கலைக்கழக நிர்வாகம் அங்கீகரிக்க மறுப்பதாகத் தெரிவித்தே குறித்த நடவடிக்கை குறித்த மாணவர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

பல்கலைக்கழக பேரவையினால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்பட்ட ஒருவரை மாணவர் ஒன்றியத் தலைவராக அங்கீகரிக்க முடியாது என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே நீண்டகாலமாக மாணவர் ஒன்றியத் தலைவர் பதவி வெற்றிடமாக உள்ளமையாலேயே புதிய தலைவரை பல்கலைக்கழக நிர்வாகத்தின் பங்களிப்பு இன்றி தெரிவு செய்திருப்பதாக பல்கலைக்கழகத்தினை முடக்கியுள்ள மாணவர்களில் ஒருவர் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் தற்போது குறித்த நடவடிக்கையில் இருந்து மாணவர்கள் பின்வாங்கியுள்ளதாக தெரியவருகின்றது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE