Wednesday 24th of April 2024 07:08:17 AM GMT

LANGUAGE - TAMIL
-
தமக்கான உள்ளீடுகள் வழங்கும் வரை விவசாய நடவடிக்கையில் ஈடுபடப்போவதில்லை; மட்டு. விவசாயிகள்!

தமக்கான உள்ளீடுகள் வழங்கும் வரை விவசாய நடவடிக்கையில் ஈடுபடப்போவதில்லை; மட்டு. விவசாயிகள்!


சிறுபோக விவசாய நடவடிக்கையின்போது விவசாயிகளுக்கான உள்ளீடுகளை உரிய காலத்தில் வழங்குவதற்கு அரசாங்கம் மிகவும் கரிசனையாகவுள்ளதாகவும் சேதனப்பசனை மூலம் வெற்றிகரமான விவசாய நடவடிக்கையினை முன்னெடுக்கமுடியும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்தார்.

எனினும் தமக்கான உள்ளீடுகளை உரிய திணைக்களங்களுக்கு வழங்கும் வரைக்கும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதில்லையென மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.

இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விவசாய ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் அக்கூட்டத்தினை புறக்கணித்து வெளிநடப்புசெய்ததுடன் ஊடகவியலாளர் சந்திப்புகளையும் நடாத்தினார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள சிறுபோக விவசாய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் வகையிலான விசேட கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த்,திருமதி நவரூபரஞ்சினி முகுந்தன் மற்றும் விவசாய திணைக்களம்,கமநல அபிவிருத்தி திணைக்களம்,நீர்பாசன திணைக்களம்,மாகாண நீர்பாசன திணைக்களம் ஆகியவற்றின் பிரதி பணிப்பாளர்கள்,பிரதேச செயலாளர்கள்,விவசாய அமைப்புகளின் பிரதிநிகள் என பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நீர்பாய்ச்சல் குளங்கள் மற்றும் சிறிய குளங்கள் ஊடாக இம்முறை 33800 ஹெக்ரயரில் சிறுபோக வேளான்மை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் சுமார் 32700ஹெக்டயர் உரம் வழங்குவதற்கான காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இங்கு மாவட்ட அரசாங்க அதிபரினால் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது மேற்கொள்ளப்படவேண்டிய செயற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது பிரதேச செயலக ரீதியான விவசாய கூட்டங்களுக்கு திகதிகள் தீர்மானிக்கப்படும்போது விவசாயத்திற்கான உரிய உள்ளீடுகளை வழங்கும்போதே விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக தெரிவித்து விவசாயிகள் கூட்டத்தினை பகிஸ்கரித்து வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ச்சியாக விவசாயிகளை ஏமாற்றும் வகையிலான நடவடிக்கைகளை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் முன்னெடுத்துவருவதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டினார்கள். கடந்த காலத்தில் விவசாய கூட்டங்களில் எடுக்கும் தீர்மானங்கள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தாத காரணத்தினால் விவசாயிகள் பெரும் நஸ்டங்களை தொடர்ச்சியாக எதிர்கொண்டுவருவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

உள்ளீடுகளை திணைக்களங்களில் வைத்துக்கொண்டு விவசாய குழுக்கூட்டங்களை நடாத்தி தீர்மானங்களை எடுப்பதன் மூலமே விவசாய நடவடிக்கைகளை ஓரளவு பாதிப்பின்றி கொண்டுசெல்லமுடியும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

பசளை உட்பட உள்ளீடுகளை சரியான காலப்பகுதிகளில் வழங்காமல் விடுவதனால் விவசாயிகள் கடும் பாதிப்புகளை எதிர்கொள்வதாகவும் 2020,2021ஆம்ஆண்டுக்கான நஸ்ட ஈடுகளே இதுவரையில் வழங்கப்படாத நிலையில் இந்த ஆண்டுக்கான சிறுபோக விவசாய நடவடிக்கையினை முன்னெடுப்பது விவசாயிகளை மேலும் கஸ்டத்திற்குள் மூழ்கடிக்கும் செயற்பாடுகள் எனவும் இதன்போது விவசாயிகள் தெரிவித்தனர்.

எனினும் விவசாயிகளுக்கு தேவையான உள்ளீடுகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை நடவடிக்கைளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் ஓரிரு தினங்களில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்தார்.

விவசாயிகளை பாதுகாக்கும் வகையிலேயே அரசாங்ம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் விவசாயிகள் எந்த அச்சமும் கொள்ளத்தேவையில்லையெனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE