Sunday 28th of May 2023 08:08:54 PM GMT

LANGUAGE - TAMIL
.
ரி-20 போட்டிகளில் அதிக அரை சதங்கள்; கெயிலை முந்தி வோர்னர் சாதனை

ரி-20 போட்டிகளில் அதிக அரை சதங்கள்; கெயிலை முந்தி வோர்னர் சாதனை


ரி-20 போட்டிகளில் அதிக அரை சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை டேவிட் வோர்னர் தன்வசமாக்கியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பையில் நடந்த போட்டியில் நேற்று டெல்லி கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வென்ற ஐதராபாத் களத்தடுப்பை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 207 ஓட்டங்கள் குவித்தது. டேவிட் வார்னர் அதிரடியாக ஆடி 92 ஓட்டங்களுடனும், பாவெல் 67 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அடுத்து ஆடிய ஐதராபாத் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 186 ஓட்டங்களே எடுத்தது. இதனால் டெல்லி அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நிகோலஸ் பூரன் அதிரடியாக ஆடி 34 பந்துகளில் 6 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 62 ஓட்டங்கள் எடுத்தார். மார்கிராம் 25 பந்தில் 42 ஓட்டம் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்நிலையில், நேற்றைய போட்டியில் டெல்லி அணியின் டேவிட் வார்னர் 89-வது அரை சதம் கடந்தார். இதன்மூலம் டி20 போட்டிகளில் அதிக அரை சதங்கள் அடித்தவர் என்ற புதிய சாதனை படைத்தார்.

இவருக்கு அடுத்த இடத்தில் கிறிஸ் கெயில் 88 அரை சதம், விராட் கோலி 77 அரை சதம் அடித்துள்ளனர்.


Category: விளையாட்டு, புதிது
Tags: ஆஸ்திரேலியா, இந்தியா, புது தில்லி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE