நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மரணம் தொடர்பில் மேலும் இரு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவு அதிகாரிகளால் இன்று பிற்பகல் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நிட்டம்புவ மற்றும் பொல்கஹவெல பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர்களாவர்.
சம்பவத்தின் போது சந்தேகநபர்கள் அணிந்திருந்த இரண்டு ஆடைகள் மற்றும் கத்தி ஒன்றையும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.