Wednesday 24th of April 2024 02:53:50 PM GMT

LANGUAGE - TAMIL
.
பிரித்தானியாவில் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

பிரித்தானியாவில் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்


தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வரும் சமவேளை, புலம்பெயர் நாடுகளிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூா்வமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்வரிசையில், பிரித்தானியாவில் குருதிக்கொடை, முள்ளிவாய்க்கால் கஞ்சி, பரப்புரை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

'உயிர்கொடுத்தவர்களுக்காய் உதிரம் கொடுப்போம்' எனும் தொனிப்பொருளில் Tooting Doner Centre,Croydon Doner Centre ஆகிய இடங்களல் 30 ற்கும் மேற்பட்டோர் இரத்த தானம் வழங்கியிருந்தனர். Aston Hall Hotel Aston, Sheffield பகுதியிலும் குருதிக்கொடை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

2009ம் ஆண்டு தமிழர்கள் மீது ஸ்ரீலங்கா அரசும், அரச படைகளும் உணவுத்தடை, மருந்துக்களுக்கு தடை போன்றவற்றறை விதித்து போர் தவிர்ப்பு வலயங்களில் தாக்குதல் நடத்தி பல ஆயிரக்கணக்கான மக்களை படுகொலை செய்தன.

இந்த நெருக்கடியான பெருந்துயரான காலத்தில் மக்களின் வயிற்றுப் பசியினை நம்பிக்கையோடு கஞ்சி தீர்த்திருந்தது.

போராளிகள் தமக்கென ஒதுக்கப்பட்டிருந்த அரசியினை மக்களின் பசிபோக்க கஞ்சியாக சமைத்து வழங்கியிருந்தனர். இதுவே 'முள்ளிவாய்கால் கஞ்சியாக' மக்களின் அப்பெருந்துயரை நினைவேந்திக் கொள்ளப்படுகின்றது.

இதேவேளை பிரித்தானிவின் பல பாகங்களில் தமிழர் வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் போன்றவற்றில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி தமிழ் மக்கள் பட்ட துயரங்களை வேற்றின மக்களுக்கும், உலகநாடுகளுக்கும் உணர்த்த காட்சிப்படங்கள் மூலமாகவும், துண்டுப்பிரசுரம் மூலமாகவும் தெரிவித்திருந்தார்கள்.


Category: செய்திகள், புதிது
Tags: இங்கிலாந்து, இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE