Tuesday 16th of April 2024 06:38:43 PM GMT

LANGUAGE - TAMIL
.
நங்கூரம் பாய்ச்சிய தாஸ் - ரஹீம் ஜோடி; முதலாம் நாள் முடிவில் பங்களாதேஷ் அணி 277 ஓட்டங்கள்

நங்கூரம் பாய்ச்சிய தாஸ் - ரஹீம் ஜோடி; முதலாம் நாள் முடிவில் பங்களாதேஷ் அணி 277 ஓட்டங்கள்


இலங்கை-பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் முதலாவது நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் பங்களாதேஷ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 277 ஓட்டஙகளை பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி, தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் பங்களாதேஷ் அணி இன்றைய முதலாவது றாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 277 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆரம்பமே பங்களாதேஷ் வீரர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இலங்கை அணி வீரர்களின் பந்துவீச்சு துல்லியமாக இருந்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் ஓட்டமெதனையும் பெறாத நிலையில் ஆட்டமிழந்து சென்றிருந்தனர்.

அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ஓட்டங்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேற ஒரு கட்டத்தில் பங்களாதேஷ் அணியின் நிலை பரிதாபத்திற்குரியதாக இருந்து.

6.5 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு முன்னணி 5 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்து இலங்கை அணி வீரர்கள் அதிர்ச்சியளித்தனர்.

அதன் பின்னர் இக்கட்டான நிலையில் ஜோடி சேர்ந்த லிட்டன் தாஸ் - முஷ்பிகர் ரஹீம் பொறுப்புடன் ஆடி வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இன்றைய முதலாம் நாள் ஆட்டம் நிறைவடைந்த நிலையில் இருவரும் ஆட்டமிழக்காது உள்ளனர்.

அணிசார்பில் லிட்டன் தாஸ் 135 ஓட்டங்களுடனும், முஷ்பிகர் ரஹீம் 115 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

பந்துவீச்சில் இலங்கை அணியின் கசுன் ராஜித 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

இரண்டு அணிகளுக்கு இடையில் முன்னதாக இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றித் தோல்வியின்றி நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE