Tuesday 16th of April 2024 01:18:42 PM GMT

LANGUAGE - TAMIL
.
2வது டெஸ்ட்; 222 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி

2வது டெஸ்ட்; 222 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி


பங்களாதேசுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் நிறைவடைந்த நிலையில் 222 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நிறைவடைந்துள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி, தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 365 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பங்களாதேஷ் அணி சார்பில் முஷ்பிகர் ரஹீம் 175 ஓட்டங்களையும், லிட்டன் தாஸ் 141 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்நிலையில், தனது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 02 விக்கெட்டுக்களை இழந்து 143 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணியின் திமுத் கருணாரத்ன 70 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

முன்னதாக ஓசத பெர்னாண்டோ 57 ஓட்டங்களுடனும், குசல் மெண்டிஸ் 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்திருந்தனர்.

இந்நிலையில் 222 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இன்று மூன்றாவது நாள் ஆட்டத்தை இலங்கை அணி தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE