முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பாலிநகர் பகுதியில் அமைந்துள்ள மதுபான நிலைய உரிமையாளர் இன்று காலை மதுபான நிலைய அருகில் உள்ள தங்குமிடத்திலுருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட நபர் கொழும்பு வத்தளை பகுதியை சேர்ந்த 40 வயதான சுப்பிரமணியம் கிருபாகரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை மல்லாவி போலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு