Tuesday 23rd of April 2024 01:19:28 AM GMT

LANGUAGE - TAMIL
.
கொமன்வெல்த் 2022 குத்துச் சண்டை போட்டி; கிளிநொச்சி இளைஞனின் பிரித்தானியா நோக்கிய சாதனைப் பயணம்

கொமன்வெல்த் 2022 குத்துச் சண்டை போட்டி; கிளிநொச்சி இளைஞனின் பிரித்தானியா நோக்கிய சாதனைப் பயணம்


பிரித்தானியா - பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் 2022 குத்துச்சண்டை போட்டியில் முதன் முதலாக கிளிநொச்சி வீரரொருவர் தெரிவாகியுள்ளார்.

கிளிநொச்சி - தருமபுரம், நாதன் குடியிருப்பை வதிவிடமாகக்கொண்ட விட்டாலிஸ் நிக்லஸ் என்னும் வீரரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் தேசியப்போட்டிகளில் வட மாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி பல பதக்கங்களை வடமாகாணத்திற்காக பெற்றுக் கொடுத்துள்ளார்.

இவரது திறமை காரணமாக இலங்கை தேசிய குத்துச்சண்டை அணிக்குள் உள்வாங்கப்பட்டு பல தகுதிகாண் போட்டிகளில் வெற்றியீட்டி இந்த கொமன்வெல்த் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இப்போட்டி நிகழ்வுகள் எதிர்வரும் ஜூலை மாதம் 28ம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 08 ஆம் திகதி வரை லண்டனில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப்பெறும் வீரர்கள் ஒலிம்பிக் தகுதிகாண் போட்டிகளில் பங்குபெறும் வாய்ப்புக்களை பெறவுள்ளனர்.


Category: விளையாட்டு, புதிது
Tags: இங்கிலாந்து, இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE