Thursday 28th of March 2024 10:14:02 AM GMT

LANGUAGE - TAMIL
-
110 நாடுகளில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா;  கடந்த வாரம் 41 இலட்சம் பேருக்கு தொற்று, 8,500 பேர் மரணம்!

110 நாடுகளில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா; கடந்த வாரம் 41 இலட்சம் பேருக்கு தொற்று, 8,500 பேர் மரணம்!


உலகெங்கும் அனேகமான நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் தொகை மீண்டும் அதிகரித்து வருகிறது.

கடந்த வாரத்தில் புதிய கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 18% அதிகரித்துள்ளது. உலக அளவில் 4.1 மில்லியனுக்கும் அதிகமான தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகளவில் கடந்த வாரம் சுமார் 8,500 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. மத்திய கிழக்கு, தென்கிழக்கு ஆசியா மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று பிராந்தியங்களில் கொரோனா மரணங்களில் கடந்த வாரம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

புதன்கிழமை பிற்பகுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, புதிய கொவிட் தொற்று நோயின் மிகப்பெரிய வாராந்திர உயர்வு மத்திய கிழக்கில் பதிவாகியுள்ளது. அங்கு தொற்று நோயாளர் தொகை 47% அதிகரித்துள்ளது. ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் நோய்த்தொற்றுகள் சுமார் 32% மற்றும் அமெரிக்காவில் சுமார் 14% அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சுமார் 110 நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் ஒமிக்ரோன் உருத்திரிபு வகைகளான BA.4 மற்றும் BA.5 ஆகியவை தீவிரமாகப் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பல்வேறு வழிகளில் தொடர்ந்து உருமாற்றமடைந்து வருகிறது. ஆனால் தொற்று நோய் முடிந்துவிடவில்லை எனவும் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதானோம் கெப்ரேயஸ் குறிப்பிட்டார்.

இந்நிலையில் முன்கள சுகாதாரப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் உட்பட மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு கொவிட் தடுப்பூசி போடுமாறு அவர் உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.

நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் தடுப்பூசி போடப்படாதவர்களாக உள்ளனர். இவர்கள் கடுமையான நோய் மற்றும் இறப்பு அபாயத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். உலகளவில் 1.2 பில்லியனுக்கும் அதிகமான கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டாலும், ஏழை நாடுகளில் சராசரியாக 13% மக்களே தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாகவும் டெட்ரோஸ் கூறினார்.

குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் ஆபத்தான தரப்பினர் பலர் இன்னமும் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ள நிலையில் பணக்கார நாடுகள் 6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE