Tuesday 16th of April 2024 03:41:17 PM GMT

LANGUAGE - TAMIL
.
முதலாவது டெஸ்ட்; இலங்கை அணி 333 ஓட்டங்கள் முன்னிலை - 2வது இனிங்சிலும் சந்திமால் அபாரம்!

முதலாவது டெஸ்ட்; இலங்கை அணி 333 ஓட்டங்கள் முன்னிலை - 2வது இனிங்சிலும் சந்திமால் அபாரம்!


சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் 3வது நாள் நிறைவில் இலங்கை அணி 333 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் அனிங்சுக்காக 222 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது.

இதனையடுத்து தனது முதலாவது இனிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 218 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன் மூலம் 4 ஓட்டங்கள் முன்னிலையுடன் தனது 2வது இனிங்சை ஆடிவரும் இலங்கை அணி போட்டியின் 3வது நாளான இன்று 9 விக்கெட் இழப்பிற்கு 329 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பில் ஒஷாட பெர்னாண்டோ-64, குசல் மென்டிஸ்-76 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்த நிலையில் தினேஸ் சந்திமால் ஆட்டமிழக்காது 86 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.

இலங்கை அணி தற்போது 333 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில் போட்டியின் 4வது நாள் நாளை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE