Friday 19th of April 2024 11:55:29 AM GMT

LANGUAGE - TAMIL
-
1வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 04 விக்கெட்டுக்களால் வெற்றி!

1வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 04 விக்கெட்டுக்களால் வெற்றி!


இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணி 04 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி, தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய இலங்கை அணி 222 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

அணி சார்பில் அதிகபடியாக 76 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த தினேஷ் சந்திமால் டெஸ்ட் போட்டிகளில் தனது 22ஆவது அரைச்சதத்தை பூர்த்தி செய்தார்.

அவர் 115 பந்துகளில் 10 நான்கு ஓட்டங்கள், ஒரு 6 ஓட்டம் அடங்களாக தமது அரைச்சதத்தை பூர்த்தி செய்தார். அத்துடன், ஓசத பெர்னாண்டோ 35 ஓட்டங்களையும், மகீஷ் தீக்ஷன 38 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய இலங்கை அணியின் ஏனைய வீரர்கள் 20க்கும் குறைந்த ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் பாகிஸ்தான் அணியின் ஷஹீன் அப்ரிடி 58 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

அதேபோல், ஹசன் அலி மற்றும் யாசிர் ஷா ஆகியோரும் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். இதேவேளை, தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 218 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

அணிசார்பில் அதிகபடியாக பாபர் அசாம் 119 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். டெஸ்ட் போட்டிகளில் அவர் பெற்றுக்கொண்ட 7ஆவது சதம் இதுவாகும்.பாபர் அசாம் 244 பந்துகளில் 11 நான்கு ஓட்டங்கள், இரண்டு 6 ஓட்டங்கள் அடங்களாக இவ்வாறு சதத்தை பூர்த்தி செய்தார்.

பந்துவீச்சில் இலங்கை ப்ரபாத் ஜயசூரிய 82 ஓட்டங்களுக்கு 05 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். அத்துடன் ரமேஷ் மெண்டிஸ் மற்றும் மகீஷ் தீக்ஷன ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். இதனையடுத்து, தமது இரண்டாம் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முடிவில் 337 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் தினேஷ் சந்திமால் 94 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அத்துடன், குசல் மெண்டிஸ் 76 ஓட்டங்களையும், ஓசத பெர்னாண்டோ 64 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணியின் மொஹம்மட் நவாஷ் 88 ஓட்டங்களுக்கு 05 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதனடிப்படையில் இரண்டாம் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பாகிஸ்தான் அணிக்கு 342 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய பாகிஸ்தான் அணி விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணிசார்பில் அதிகபடியாக அப்துல்லா ஷபீக் 160 ஓட்டங்களையும் பாபர் அசாம் 55 ஓட்டங்களையும், மொஹம்மட் ரிஸ்வான் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.பந்துவீச்சில் இலங்கை அணியின் ப்ரபாத் ஜயசூரிய 135 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE