Friday 19th of April 2024 08:56:35 AM GMT

LANGUAGE - TAMIL
-
பாகிஸ்தான் அணியுடனான  போட்டியில் 246 ஓட்டங்கள் வித்தியசாத்தில் இலங்கை அணி வெற்றி!

பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் 246 ஓட்டங்கள் வித்தியசாத்தில் இலங்கை அணி வெற்றி!


இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 246 ஓட்டங்கள் வித்தியசாத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன் அடிப்படையில் தனது முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 378 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் தினேஸ் சந்திமால் அதிகபட்சமாக 80 ஓட்டங்களையும் நிரோஷன் திக்வெல்ல 51 ஓட்டங்களையும் மற்றும் ஓசத பெர்ணான்டோ 50 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் நஷீம் ஷா மற்றும் யாசிர் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர்.

பதிலுக்கு தமது முதல் இன்னிங்ஸை விளையாடிய பாதிஸ்தான் அணி சகல விக்கெட்களையும் இழந்து 231 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் அக்ஹா சல்மான் அதிகபட்சமாக 62 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் ரமேஷ் மென்டிஸ் 5 விக்கெட்களையும், பிரபாத் ஜயசூரிய 3 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் முதல் இன்னிங்ஸ் நிறைவில் இலங்கை அணி 147 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தது.

பதிலுக்கு தமது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 8 விக்கெட்களை இழந்து 360 ஓட்டங்கள் பெற்றுக் கொண்டிருந்த நிலையில் போட்டியை இடைநிறுத்தியது.

இலங்கை அணி சார்பில் உப தலைவர் தனஞ்சய சில்வா 109 ஓட்டங்களையும், அணித்தலைவர் திமுத் கருணரத்ன 61 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டிருந்தனர்.

அதனடிப்படையில் பாகிஸ்தான் அணிக்கு 508 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதிலுக்கு தமது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி சகல விக்கெட்களையும் இழந்து 261 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாம் அதிகபட்சமாக 81 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பந்துவீச்சில் பிரபாத் ஜயசூரிய 5 விக்கெட்களையும் ரமேஷ் மென்டிஸ் 4 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் 246 ஓட்டங்கள் வித்தியசாத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1 - 1 ரீதியில் போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE