Thursday 21st of September 2023 11:58:40 PM GMT

LANGUAGE - TAMIL
-
டெஸ்ட் தரவரிசையில்  3வது இடத்திற்கு முன்னேறிய இலங்கை!

டெஸ்ட் தரவரிசையில் 3வது இடத்திற்கு முன்னேறிய இலங்கை!


2022 - 2023 க்கான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இலங்கை அணி 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இன்று இடம்பெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானை 246 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததை அடுத்து, இரண்டு போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடித்தது.

இதன்மூலம், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இலங்கை 64 புள்ளிகளுடன் (53. 33%) 3 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

தென்னாப்பிரிக்கா 60 புள்ளிகளுடன் (71. 43%) முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 84 புள்ளிகளுடன் (70. 00%) இரண்டாவது இடத்திலும் உள்ளன.

இலங்கைக்கு அடுத்தபடியாக 75 புள்ளிகளுடன் (52.08%) இந்தியாவும், 56 புள்ளிகளுடன் (51.85) பாக்கிஸ்தானும்இடம்பிடித்துள்ளது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE