Friday 29th of March 2024 09:19:53 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஒரே நாடு – ஒரே சட்டம் தொடர்பான செயலணி அறிக்கையை குப்பை கூடையில் போட  நடவடிக்கை எடுக்க வேண்டும்!

ஒரே நாடு – ஒரே சட்டம் தொடர்பான செயலணி அறிக்கையை குப்பை கூடையில் போட நடவடிக்கை எடுக்க வேண்டும்!


"பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ஒரே நாடு – ஒரே சட்டம் தொடர்பான செயலணி அறிக்கையை குப்பை கூடையில் போடுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

- இவ்வாறு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. வலியுறுத்தினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் 'சர்வகட்சி ஒன்றிணைவு' என்ற தொனிப்பொருளில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இணைந்து இன்று நடத்திய கூட்டு ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கையை ஜனாதிபதி எடுக்க வேண்டும்.

இனங்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்த முற்பட்டவர்தான் ஞானசார தேரர். அவர் தலைமையில் அமைந்த குழுவின் அறிக்கையைக் குப்பைத் தொட்டியில் வீச நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை ஜனாதிபதி அறிவிக்க வேண்டும்" - என்றார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE